ரபேல் விமானம் தற்போது இருந்திருந்தால் விளைவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும் - நரேந்திர மோடி

மோடிக்கு எதிராக பேசியவர்கள், தற்போது நாட்டிற்கு எதிராகவும் பேசி, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்

Post IAF Strikes : இந்தியா டுடே கான்க்ளேவ் 2019 மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. வெளியுறவுக் கொள்கைகளால் ஏற்பட்ட தாக்கத்தினை மக்கள் தற்போது நேரடியாக பார்த்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். இந்தியர்களின் ஒற்றுமை ஆண்டி-நேசனல்கள் மத்தியில் பெரிய பயத்தை உண்டாக்கியுள்ளது என்றூம் கூறியுள்ளார்.

மேலும், இந்திய மக்கள் அனைவரும் ஏன் தற்போது ஒரு ரபேல் கூட இல்லை என்று கேட்கத் துவங்கியுள்ளனர். மேலும் இந்தியர்கள் அனைவரும் ரபேல் இல்லாததை நினைத்து வருத்தம் கொள்கின்றனர். இந்திய மக்கள் அனைவரும் ஒரே குரலில் தற்போது ரபேல் மட்டும் இருந்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்றும் கூறுவருகின்றனர் என்று அவர் கூறினார். ரபேல் பேர ஒப்பந்தத்தில் ஊழல் என்று கூறி நடத்திய அரசியலால் நாடு தற்போது எவ்வளவு பாதிக்கப்பட்டிருகிறது என்று கேள்வி எழுப்பினார் மோடி. பின்பு, மோடியை பற்றியும், எங்களின் திட்டங்கள் பற்றியும் மாற்றுக் கருத்துகளை அவர்கள் கூறலாம் ஆனால் நாட்டின் பாதுகாப்பு பற்றி அவர்கள் கூறக்கூடாது என்றும் பேசினார்.

இந்தியா டுடே கான்கிளேவில் மோடி பேசியது  என்ன ?

“இன்றைய இந்திய புதிய இந்தியா. இன்று இந்தியர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் ஒற்றுமை தேச விரோதிகளுக்கு பெரிய பயத்தினை உருவாக்கியுள்ளது. இன்றைய சூழலில் இந்த பயம் நல்லது என்று தான் நினைக்கின்றேன்.

எங்களுடைய அரசு, மக்களின் நலனிலும், தேசத்தின் நலனிலும் பொறுப்புடன் நடந்து கொள்ள உறுதி பூண்டுள்ளது. புதிய கொள்கைகள் மூலமாக உலக நாடுகள் இந்தியாவை உற்றுநோக்கி பார்த்து வருகின்றன. தேச மக்கள் அனைவரும் நம் நாட்டு ராணுவத்திற்கு துணையாக நிற்கும் போது, சிலர் இங்கு நம் ராணுவத்தின் மீதே சந்தேகம் அடைகின்றனர்.

சிலரின் கருத்துகள் மற்றும் அறிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில், ரேடியோவில், தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மோடிக்கு எதிராக பேசியவர்கள், தற்போது நாட்டிற்கு எதிராகவும் பேசி, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.” என்றும் அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க : அபிநந்தனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

மேலும் அவர் “நீங்கள் நமது ராணுவத்தை நம்புகின்றீர்களா அல்லது சந்தேகம் கொள்கின்றீர்களா? நமது நாட்டின் போர் ராணுவ வீரர்கள் தந்த அறிக்கையை நம்புகின்றீர்களா அல்லது நம் நாட்டின் மீது தொடர்ந்து நடத்தப்படும் தீவிரவாத தாக்குதலை ஊக்குவிப்பவர்களை நம்புகின்றீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த நாட்டின் பாதுகாப்போடு யாரும் விளையாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார் மோடி.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close