Advertisment

தேர்தலுக்கு பிந்தைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சோதனை: பரிசோதனை வாக்கெடுப்பு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி

ஜூன் 1 அன்று, தேர்தல் ஆணையம் ஒரு நிர்வாக தரநிலை இயக்க நடைமுறையை (SOP) வெளியிட்டது, இது சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் முடிவுகள் வந்த ஏழு நாட்களுக்குள் செய்ய வேண்டும் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றுக்கு ரூ. 40,000 டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mock poll

EC to allow mock poll with up to 1,400 votes for candidates keen on post-election EVM check

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) சுப்ரீம் கோர்ட் கட்டாயமாக சரிபார்ப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் நெறிமுறையில், ஒரு போலி வாக்கெடுப்பு இடம்பெறும், என தெரிகிறது.

Advertisment

18வது மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்காக 8 விண்ணப்பங்களும், ஆந்திரா மற்றும் ஒடிசாவில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு மூன்று விண்ணப்பங்களும் தேர்தல் கண்காணிப்புக்குழுவுக்கு வந்துள்ளது.

முதன்முறையாக, ஒரு சட்டமன்றப் பகுதி அல்லது தொகுதிக்கு 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பர்ன்ட் மெமரி (burnt memory)/ மைக்ரோகண்ட்ரோலர்களை சரிபார்ப்பதற்கான உரிமையை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள வேட்பாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய பிறகு, இந்த விண்ணப்பங்கள் ஏப்ரலில் பெறப்பட்டன.

ஜூன் 1 அன்று, தேர்தல் ஆணையம் ஒரு நிர்வாக தரநிலை இயக்க நடைமுறையை (SOP) வெளியிட்டது, இது சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் முடிவுகள் வந்த ஏழு நாட்களுக்குள் செய்ய வேண்டும் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றுக்கு ரூ. 40,000 டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பர்ன்ட் மெமரி வெரிஃபிகேஷன் (burnt memory verification) எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை விவரிக்கும் தொழில்நுட்ப தரநிலை இயக்க நடைமுறை (SOP) இறுதி செய்யப்பட்டு இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரங்களின்படி, வேட்பாளர்களால் அடையாளம் காணப்பட்ட இயந்திரங்களில் போலி வாக்கெடுப்பை நடத்துவதற்கான யோசனையை ஆணையம் நோக்கிச் செல்கிறது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறனை நிறுவ இது ஒரு முயற்சி மற்றும் சோதனை முறையாகும்.

விவிபேட் (VVPAT) சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையுடன் பொருத்துவதும் இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக செய்யப்படும். 

போலி வாக்கெடுப்பின் போது, வேட்பாளர் தானே வாக்களிக்கவோ அல்லது ஒரு பிரதிநிதியைப் பெறவோ சுதந்திரமாக இருப்பார் என்று அறியப்படுகிறது. மேலும், வேட்பாளர் விரும்பினால், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூன்று பகுதிகளான - கண்ட்ரோல் யூனிட் (CU), வாக்குச் சீட்டு அலகு (Ballot Unit) மற்றும் விவிபேட் ஆகியவற்றை அவர் விரும்பும் வரிசையில் ஏற்பாடு செய்து இணைக்கலாம்.

கண்ட்ரோல் யூனிட் ஆனது மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. கண்ட்ரோல் யூனிட் ஆக்டிவேட்டில் இருக்கும் வரை ஒரு வாக்காளர் வாக்களிக்க முடியாது. 

பலோட் யூனிட் (BU) கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது, மேலும் விவிபேட் வாக்களிக்கப்பட்ட வேட்பாளரின் சின்னத்துடன் ஒரு சீட்டை அச்சிட வேண்டும், இது வாக்காளர் தனது வாக்கை சரிபார்க்க அனுமதிக்கிறது.

தற்போது, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின்மூன்று பகுதிகளும் பின்வரும் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன. பலோட் யூனிட், விவிபேட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விவிபேட், கண்ட்ரோல் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை பாதிக்காமல் இதை எந்த வரிசையிலும் இணைக்க முடியும். சரிபார்ப்பு கோரும் வேட்பாளரை திருப்திப்படுத்த, கமிஷன் மூன்று பகுதிகளையும் அவரது விருப்பப்படி எந்த வரிசையிலும் இணைக்க அனுமதிக்கும்.

ஏப்ரல் 26 அன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கைக்கு எதிராக விவிபேட் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எவ்வாறாயினும், மின்னணு வாக்குப்பதிவு முறையில் நம்பிக்கையை அதிகரிக்க வாக்கு எண்ணிக்கைக்குப் பிந்தைய நடைமுறையில் சில மாற்றங்களைச் செயல்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது.

முதன்முறையாக, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 45 நாட்களுக்கு சிம்பல் லோடிங் யூனிட்ஸ் (SLUs) சீல் வைத்து சேமிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விவிபேட் இயந்திரங்களில் தேர்தல் சின்னங்களைப் பதிவேற்றப் பயன்படுத்தப்படும் மெமரி யூனிட்ஸ் ஆன சிம்பல் லோடிங் யூனிட்ஸ், இந்த சிம்பல்களை ஏற்றுவதற்கு முதலில் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த சிம்பல் லோடிங் யூனிட்ஸ், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் போலவே திறக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, கையாளப்படும். சிம்பல் லோடிங் யூனிட்களை பரிசோதிப்பதற்கான நடைமுறையை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதா என்பது தெளிவாக இல்லை. 

கூடுதலாக, உச்ச நீதிமன்றம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்த வேட்பாளர்களுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பைக் கோருவதற்கான உரிமையை வழங்கியது, மற்றொரு எதிர்பாராத முடிவைக் குறிக்கிறது.

ஜூன் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட அதன் நிர்வாக தரநிலை இயக்க நடைமுறையில், முடிவு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து, வேட்பாளர்கள் சரிபார்ப்புக்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. எவ்வாறாயினும், முடிவு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குப் பிறகே, சரிபார்ப்பு சாத்தியமாகும், ஏனெனில் முடிவை எதிர்த்து தேர்தல் மனுக்களை தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு உரிமை உண்டு.

மனு தாக்கல் செய்யப்பட்ட தொகுதியின் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் ஆணையத்தால் சீல் வைக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட்டால், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு கோரும் வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும். 

Read in English: EC to allow mock poll with up to 1,400 votes for candidates keen on post-election EVM check

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment