இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 4,748 பேர் குணமடைந்துள்ளனர். நோய் பாதித்தவர்களில் குணமடையும் சராசரி 20.57 சதவீதமாக உள்ளது. நேற்றில் இருந்து, மேலும் 1684 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதுவரையில் மொத்தம் 23,077 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு, 718 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு கொரோனா தொற்று, ஏழு மாநிலங்களில் இருந்து பதிவாகியதாகவும், இங்கு காணப்படும் நோய் தொற்று வளர்ச்சி விகிதம் தேசிய விகிதத்தை விட அதிகமாக உள்ளது என்று டெல்லி-ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய மாடலிங் தெரிவிக்கின்றது.
ஜார்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் குஜராத் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி விகிதத்தில் ஏறுவரிசையில் உள்ளன.
பேராசிரியர் என்.எம் அனூப் கிருஷ்ணன் தலைமையில், ஐ.ஐ.டி டெல்லி பேராசிரியர் ஹரிபிரசாத் கோடமனா மற்றும் ஹர்குன் சிங், ரவீந்தர், தேவன்ஷ் அகர்வால், அம்ரீன் ஜான், சுரேஷ், சவுரப் சிங் ஆகியோர் அடங்கிய குழு PRACRITI எனும் புதிய டாஷ்போர்டை சமிபத்தில் உருவாக்கியது.
நாட்டின் 60 சதவீத கொரோனா தொற்று பாதிப்பைக் கொண்ட 19 மாநிலங்களில் உள்ள 100 மாவட்டங்களின் 'அடிப்படை பரவல் எண்’-ஐ மதிப்பிடுவதை இந்த போர்டல் நோக்கமாக கொண்டுள்ளது.
பரவல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை மதிப்பிடுவதற்கு, ‘அடிப்படை பரவல் எண்’ ( R0) எனப்படும் அளவைப் உலகளவில் தொற்றுநோயியல் நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர். நோய் தொற்று உள்ள ஒருவர் அதிகபட்சம் எத்தனை நபர்களுக்கு அந்த தொற்றை பரப்பலாம் என்பதையே இது குறிக்கிறது. அதாவது தொற்று நோயானது அதன் வீரியமிக்க காலத்தில் எவ்வளவு வேகமாகப் பரவும் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அலகு R Nought (R0) ஆகும்
உதாரணமாக, குஜராத் மாநிலம் 3.3 என்ற மிக உயர்ந்த R0 மதிப்பைக் கொண்டுள்ளது. அதாவது, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் சராசரியாக 3.3 பேருக்கு அதை பரப்புகிறார்கள் என்று பொருள் கொள்ளப்படுகிறது. 100 மாவட்டங்களில், குறைந்தது 28 மாவட்டங்களின் பரவல் விகிதம் , இந்தியாவின் சராசரியை விட அதிகமாக உள்ளது. இந்தியாவின் சராசரி R0 மதிப்பு 1.8-க கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த 28 மாவட்டங்கள் அமைந்துள்ள மாநிலங்களின் விவரங்கள் பின்வருமாறு:
- ராஜஸ்தான் (5),
- உத்தரப்பிரதேசம் (4),
- மத்தியப் பிரதேசம் (4),
- குஜராத் (4),
- தமிழ்நாடு (3),
- மகாராஷ்டிரா (3),
- கர்நாடகா (2),
- தெலுங்கானா (2) ,
- பஞ்சாப் (1).
கேரளா, ஹரியானா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் கொரோனா வைரஸ் தொற்று வளர்ச்சி விகிதத்தில் சரிவைக் காண்கின்றன. இந்த மாநிலங்களின் அடிப்படை பரவல் எண் (R0) ஒன்றுக்கு கீழே உள்ளது. இருப்பினும், தமிழகம் இன்னும் மாவட்ட அளவில் குறிப்பிடத்தக்க மாறுபாட்டை வெளிபடுத்திகிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த R0 மதிப்பு ஒன்றுக்கும் குறைவாக இருந்தாலும் (.93), அதன் ஆறு மாவட்டங்கள் R0 மதிப்பை அதிகமாக பதிவு செய்திருக்கின்றன. உதாரணமாக, தென்காசி மாவட்டத்தின் பரவல் எண் 6.27-கவும், வேலூரில் பரவல் எண் 1.64-கவும் உள்ளது.
உண்மையில், இந்த 28 மாவட்டங்களின் காணப்படும் பரவல் வகிதம், அந்தந்த மாநிலங்களின் பரவல் விகிதத்தை விட அதிகமாக அமைந்துள்ளது. அதாவது, மாநிலத்தின் பிற பகுதிகளில் பெருந்தொற்று கட்டுப்படுத்திய சூழ்நிலையில், சில மாவட்டங்களில் மட்டும் ஏன் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகின்றன ? என்பதை இந்த மாறுபாடுகள் குறிக்கின்றன.
பொது முடக்க காலத்தில் எவ்வாறு தளர்வு கொண்டுவரலாம் என்று மத்திய அரசு யோசித்து வரும் நிலையில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் எடுக்கப்படவேண்டிய முயற்சிகளின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.