Advertisment

PM Awas Yojana 2020 : சொந்த வீடு வாங்க வேண்டுமா? இந்த தகுதிகள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலி

PM Awas Yojana : ஒருவர் முதல் முறையாக ஒரு வீடு வாங்குகிறார் என்றால் அவருக்கு கடனுடன் இணைக்கப்பட்ட மானியம் வழங்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pradhan Mantri Awas Yojana, PMAY, PM Modi, House for all, government scheme, PMAY news, PMAY news in tamil, PMAY latest news, PMAY latest news in tamil

Pradhan Mantri Awas Yojana, PMAY, PM Modi, House for all, government scheme, PMAY news, PMAY news in tamil, PMAY latest news, PMAY latest news in tamil

Pradhan Mantri Awas Yojana (PMAY) என்ற இத்திட்டம் ஜூன் 1, 2015 ஆம் நாள் பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு நகரங்கள் மற்றும் கிராமங்களில் குறைந்த விலையில் மலிவான வீடுகளை கொடுப்பதே PMAY எனப்படும் இத்திட்டத்தின் நோக்கமாகும். மார்ச் 31, 2022 க்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதும் 2 கோடி வீடுகளை கட்டுவதும் இதன் நோக்கமாகும்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் முதல் முறையாக ஒரு வீடு வாங்குகிறார் என்றால் அவருக்கு கடனுடன் இணைக்கப்பட்ட மானியம் வழங்கப்படும். வீடு வாங்க வீட்டுக் கடனுக்கான வட்டி மானியமாக இது இருக்கும். மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் இத்திட்டத்தில் மானியம் ரூபாய் 2.67 லட்சம் வரை இருக்கும்.

திட்டத்தின் கீழ் வெவ்வேறு பிரிவுகள்

முதல் மற்றும் இரண்டாம் பிரிவு

ஆண்டுக்கு 3 முதல் 6 லட்சம் வரை வருமானம் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (Economically Weaker Section -EWS) மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் (Lower Income Group -LIG) ஆகியோரைக் கொண்டிருக்கும்.

இந்த பிரிவில் வட்டிவிகித மானியம் 6.50% p.a.

வீட்டு கடன் காலம் (அதிகபட்சமாக) 20 ஆண்டுகள்

இந்த பிரிவின் கீழ் மானியத்திற்கு தகுதி பெறுவதற்கான அதிகபட்ச தகுதியான வீட்டுக் கடன் தொகை ரூபாய் 6 லட்சம்

இந்த பிரிவின் கீழ் அதிகபட்ச வட்டி மானிய தொகை ரூபாய் 2.67 லட்சம்

மூன்றாம் பிரிவு

ஆண்டுக்கு 6 முதல் 12 லட்சம் வரை வருவாய் உள்ள மத்திய வருவாய் பிரிவினர் -1 (middle income group-1)

இந்த பிரிவில் வட்டி விகித மானியம் 4.0% p.a இருக்கும்

வீட்டி கடன் காலம் (அதிகபட்சமாக) 20 ஆண்டுகள்

இந்த பிரிவின் கீழ் மானியத்திற்கு தகுதி பெறுவதற்கான அதிகபட்ச தகுதியான வீட்டுக் கடன் தொகை ரூபாய் 9 லட்சம்

இந்த பிரிவின் கீழ் அதிகபட்ச வட்டி மானிய தொகை ரூபாய் 2.35 லட்சம்

நான்காம் பிரிவு

ஆண்டுக்கு 12 முதல் 18 லட்சம் வரை வருவாய் உள்ள மத்திய வருவாய் பிரிவினர் -2 (middle income group-2)

இந்த பிரிவில் வட்டி விகித மானியம் 3.0% p.a. இருக்கும்

வீட்டு கடன் காலம் (அதிகபட்சமாக) 20 ஆண்டுகள்

இந்த பிரிவின் கீழ் மானியத்திற்கு தகுதி பெறுவதற்கான அதிகபட்ச தகுதியான வீட்டுக் கடன் தொகை ரூபாய் 12 லட்சம்

இந்த பிரிவின் கீழ் அதிகபட்ச வட்டி மானிய தொகை ரூபாய் 2.30 லட்சம்.

தேவையான ஆவணங்கள்

சம்பளம் வாங்குபவர்களுக்கு: அடையாள சான்று : பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுனர் உரிமம், அரசு வழங்கும் ஏதாவது புகைப்பட அடையாள அட்டை.

முகவரி சான்று : வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கடவுச் சீட்டு, இந்திய ஆயுள் காப்பீட்டு கழக பாலிசி, வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள முகவரி.

வருவாய் சான்று: கடந்த ஆறு மாத வங்கி அறிக்கை, வருமான வரி ரசீது, கடந்த இரண்டு மாத வருவாய் ரசீது.

சம்பளம் இல்லாத பிரிவினருக்கு:கடை மற்றும் நிறுவனத்தின் சான்றிதழ், Trend license certificate, SSI பதிவு சான்றிதழ், Sales Tax / VAT சான்றிதழ், Partnership deeds, Factor Registration Certificate, Export Import Code Certificate.

PM Awas Yojana திட்டத்துக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க http://pmaymis.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment