மத்திய ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேலுக்கு "பாலியல் அழைப்புகள்" செய்ததாக ராஜஸ்தானின் பாரத்பூரை சேர்ந்த இருவரை டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேலின் தனிப்பட்ட செயலாளர் அலோக் மோகன் ஜூன் கடைசி வாரத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அவர்கள் இந்த மாத தொடக்கத்தில் (ஜூலை முதல் வாரம்) கைது செய்யப்பட்டனர்.
“எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, எம்.டி வக்கீல் மற்றும் எம்.டி சாஹிப் ஆகிய இரண்டு பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். எம்.டி சபீர் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குழுவாக "பாலியல் கடத்தல்" மோசடி செய்து வருவது கண்டறியப்பட்டது. பாலியல் அழைப்பு என்பது, பொதுவாக பிளாக்மெயிலை (மிரட்டல்) உள்ளடக்கியது. பாலியல் இயல்புடைய தொலைபேசி/வீடியோ அழைப்பை பகிரங்கமாக பதிவு செய்து அச்சுறுத்துவது."என்று அந்த அதிகாரி கூறினார்.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'-ஸிடம் இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் பேசுகையில், அவர் தனது மொபைல் எண்ணுக்கு அழைப்பு வந்ததாக கூறினார். "சம்பவம் நடந்த உடனேயே, எனது அலுவலகம் மூலம் புகாரைப் பதிவு செய்தேன். மத்தியப் பிரதேசத்தில் உள்ள எனது கிராமத்திற்குச் சென்றபோது எனக்கு அந்த அழைப்பு வந்தது. அதுவும் எனது தொலைபேசியில் எனக்கு அழைப்பு வந்தது.
இது தொடர்பான அனைத்து தகவல்களையும் டெல்லி போலீசாரிடம் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்கு முன்பு, நான் போலீஸில் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர்கள் எண்ணைக் கண்டுபிடித்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது." என்று கூறினார்.
புகாரின்படி, இணை அமைச்சர் படேல் அறியப்படாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பைப் பெற்றார். அதில் அழைப்பாளர் ஆபாச கிளிப்பை அனுப்பியுள்ளார். “படேல் உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டார். பின்னர் அவருக்கு மீண்டும் அழைப்பு வந்தது, அதில் அழைப்பாளர் தனது வீடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.
இதன்பின்னர், படேல் தனது சட்ட ஆலோசகருடன் இந்த விஷயத்தை விவாதித்து டெல்லி போலீசாரை அணுக முடிவு செய்தார். அவர் சார்பாக, அவரது தனிப்பட்ட செயலாளர் அலோக் மோகன், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவை தொடர்பு கொண்டு, குற்றப்பிரிவில் புகார் செய்தார். ஐபிசி பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 419 (ஆள்மாறாட்டம்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கினர், ”என்று அந்த அதிகாரி கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் வசிக்கும் எம்.டி சபீர் மற்றும் அசாமில் உள்ள முகவரிக்கு இணை அமைச்சர் படேலுக்கு அழைப்புகள் வந்த இரண்டு தொலைபேசி எண்களை போலீசார் கண்டுபிடித்தனர். "ஒரு சிம் 36 சர்வதேச மொபைல் கருவி அடையாள (ஐ.எம்.இ.ஐ) எண்களில் பயன்படுத்தப்பட்டது. மற்றொன்று 18 ஐ.எம்.இ.ஐ எண்களில் பயன்படுத்தப்பட்டது என்பதை விசாரணைக் குழு அறிந்தது.
உள்ளூர் போலீஸ் இன்பார்மர்களின் உதவியுடன் பொறி வைக்கப்பட்ட நிலையில், இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். வீடியோ அழைப்பு செய்யப்பட்ட செல்போன்களில் ஒன்றை போலீசார் மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர். " என்று ஒரு அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil