/indian-express-tamil/media/media_files/2024/10/30/TjxRfKeullooEQb6JlsC.jpg)
“ராகுல் காந்தி ஒரு ஏமாற்றுக்காரர். அவர் ஒரு விஷயத்தைச் சொல்கிறார், அவருடைய கட்சி அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது” என்கிறார் பிரகாஷ் அம்பேத்கர். (Express file photo by Amit Chakravarty)
“எங்கள் முதல் வாக்குறுதி என்னவென்றால், நாங்கள் மராட்டியர்களுக்கு ஓ.பி.சி ஒதுக்கீட்டை நீட்டிக்க மாட்டோம் ... விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காகவும் நாங்கள் இருக்கிறோம்” என்று ஓ.பி.சி மகாசங் மற்றும் ஏக்லவ்யா ஆதிவாசி அமைப்புடன் ஒரு சமூக தளத்தை உருவாக்கிய வஞ்சித் பகுஜன் அகாதி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் ஒரு பேட்டியில் கூறுகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: Prakash Ambedkar: ‘Muslims, Dalits will return to us as this Maharashtra election is about saving quota, not Constitution’
பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி (வி.பி.ஏ) 2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது, ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை என்றாலும் 6.92% வாக்குகளைப் பெற்றது. இந்த ஆண்டு, லோக்சபா தேர்தலில், கட்சியின் ஓட்டு சதவீதம், 2.77 சதவீதமாக குறைந்துள்ளது.
பிரகாஷ் அம்பேத்கர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் இந்தியா கூட்டணியை நோக்கி நகர்ந்ததற்குக் காரணம், ஏனெனில், அவர்கள் அரசியலமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதைக் கண்டனர். நவம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்த சமூகங்கள் வி.பி.ஏ-க்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையைப் பற்றி அவர் பேசுகிறார். மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) இடஒதுக்கீட்டை "காப்பாற்ற வேண்டும்" என்ற கோரிக்கை ஒரு முக்கிய தேர்தல் பிரச்னையாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
2019 மக்களவைத் தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம் உடன் கூட்டணி வைத்திருந்தீர்கள். ஏன் இந்த முறை யாருடனும் கூட்டணி வைக்கவில்லை?
பிரகாஷ் அம்பேத்கர்: ஓ.பி.சி மகாசங்கம் மற்றும் ஏகலைவா ஆதிவாசி அமைப்புடன் இணைந்து சமூக தளத்தை உருவாக்கியுள்ளோம். வேட்பாளர் தேர்வை நாங்கள் பரவலாக்குகிறோம், நாங்கள் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பதை முடிவு செய்வோம். நாங்கள் ஏ.ஐ.எம்.ஐ.எம் உடன் கூட்டணியை முறித்துவிட்டோம். ஓ.பி.சி அமைப்புகள் 2019-ல் எங்களுடன் இருந்தன. ஏ.ஐ.எம்.ஐ.எம் ஒரு நேர்மையான கட்சி அல்ல, அது ஓடிவிடும். சில அமைப்புகளின் மூலம் அல்லாமல் முஸ்லிம்களுடன் நேரடியான உறவைப் பேணுவோம். நாங்கள் 20 முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம், கடந்த 70 ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதுவே அதிகப் பங்கேற்பு என்று கூறினார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பது பா.ஜ.க விமர்சகர்களின் கருத்து. இந்தியா கூட்டணியையும் காங்கிரஸையும் ஆதரிக்க ஏன் நினைக்கவில்லை?
பிரகாஷ் அம்பேத்கர்: பா.ஜ.க எப்படியும் சரியும். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணியும் மகாராஷ்டிராவில் சொல்வது போல் மராட்டிய கானாவால் அல்லது மராத்தா ஹோட்டல்கள். இரண்டு முகாம்களும் ஒன்றுதான். இந்த இரண்டிலும் தேவையற்ற நபர்கள் இருவர் மட்டுமே உள்ளனர்: ஒருவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான முகாமில் தேவேந்திர ஃபட்னாவிஸ், மற்றொருவர் சரத் பவார் தலைமையிலான முகாமில் உத்தவ் தாக்கரே. இந்த மராத்தா ஹோட்டல்கள் தங்கள் உணவை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் மராத்தியர்களை அதிக எண்ணிக்கையில் களமிறக்குகிறார்கள். இரண்டு தரப்பினரும் குடும்பக் கட்சிகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு திருமணம் செய்துகொண்டவர்களைப் போன்றவர்கள், அங்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்படுகிறார்கள்.
எந்த இரண்டு பேருக்கு இந்த முறை தேர்தல் களத்தில் போட்டி?
பிரகாஷ் அம்பேத்கர்: இந்தத் தேர்தல் மனோஜ் ஜராங்கே பாட்டீலுக்கும் வி.பி.ஏ-வுக்கும் இடையில் இருக்கும். காரணம், கட்சிகள் கொள்கைகளை முடிவு செய்வதில்லை, மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். மராத்தியர்களுக்கு ஓ.பி.சி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஜரங்கே படேலின் போராட்டம், அதற்கு ஓ.பி.சி-கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு, சண்டையிடும் இரண்டு குழுக்கள் உள்ளன. நாங்கள் ஓ.பி.சி-களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று மராத்தியர்கள் கூறுகிறார்கள். ஜாரங்கே பாட்டீல் தனது வேட்பாளர்களை அறிவிப்பார், அது தேசிய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மராத்தியர்களை ஓ.பி.சி பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையில் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள், உங்கள் முக்கிய தேர்தல் பிரச்னைகள் என்ன?
பிரகாஷ் அம்பேத்கர்: ஓ.பி.சி இடஒதுக்கீட்டை மராட்டியர்களுக்கு நீட்டிக்க மாட்டோம் என்பது எங்கள் முதல் வாக்குறுதி. மேலும், இந்த சவர்ணங்கள் மேக் இன் இந்தியா பற்றி பேசுகின்றனர் என்றும் மற்றவை பகுஜன்கள் மேட் இன் இந்தியா என்றும் நாங்கள் நம்புகிறோம். அவர்கள் ஆக்கப்பூர்வமான கைவினைஞர்கள். இந்தியாவில் என்ன, எப்படி தயாரிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, சாத்தியமான வழிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை நாங்கள் பார்க்கிறோம்.
எங்களது மூன்றாவது தேர்தல் பிரச்னை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) சட்டப்பூர்வ உத்தரவாதமாகும். பெரிய விவசாயிகள் கவலைப்படுவதில்லை, ஆனால், விவசாய நெருக்கடியின் காரணமாக சிறு விவசாயிகளுக்கு (எம்.எஸ்.பி) உத்தரவாதம் தேவைப்படுகிறது. சவர்ணா கட்சிகள் வியாபாரிகளின் நலன்களுடன் இணைந்திருப்பதால் அதைச் செய்ய மாட்டார்கள்.
பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ஒழித்துவிடும் என்ற அச்சத்தில்தான் உங்கள் ஆதரவு தளம் காங்கிரஸுக்குத் தாவியது என்று நினைக்கிறீர்களா?
பிரகாஷ் அம்பேத்கர்: கடந்த லோக்சபா தேர்தலில் முஸ்லிம்கள் முழு மனதுடன் இந்தியா கூட்டணியுடன் சென்றனர், 80% தலித்துகளும் இடம் பெயர்ந்தனர். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இந்த நேரத்தில், அவர்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள். லோக்சபா தேர்தல் அரசியல் சாசனத்தை காப்பாற்றுவது, இந்த தேர்தல் இடஒதுக்கீட்டை காப்பாற்றுவதற்கானது, சவர்ணாக் கட்சிகள் என்பதால், பா.ஜ.க-வும், காங்கிரஸும் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள். ஜாரங்கே பாட்டீல் தனது பட்டியலை அறிவித்தவுடன், அவர் தேசிய அரசியல் கட்சிகளைத் தழுவிச் செல்வார், மேலும் 90% மராத்தியர்கள் அவருடன் செல்வார்கள்.
காங்கிரஸ் இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்றால், இடஒதுக்கீட்டு வரம்பை மீறியதற்காக ராகுல் காந்தி அழைப்பு விடுப்பதையும், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கேட்பதையும், 90% சமூகத்தின் அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டதாகப் பேசுவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பிரகாஷ் அம்பேத்கர்: ராகுல் காந்தி ஏமாற்றுக்காரர். அவர் ஒரு விஷயத்தைச் சொல்கிறார், அவருடைய கட்சி அதற்கு நேர்மாறாகச் செய்கிறது. பட்டியல் இனத்தவரில் (எஸ்சி) உள் இடஒதுக்கீடு துணைப் பிரிவை உருவாக்க அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தெலுங்கானா மற்றும் கர்நாடகா குழுக்களை நியமித்துள்ளன. ஓ.பி.சி மற்றும் தலித் அமைப்புகள், கொள்கை விவகாரங்களை நீதிமன்றத்தால் வகுக்க முடியுமா அல்லது அவை நாடாளுமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்புதானா என்று உச்ச நீதிமன்ற அமர்வில் ஒரு குறிப்பு தாருங்கள் என்று கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது.
சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நிர்ணய அறிக்கைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பிரகாஷ் அம்பேத்கர்: 2026 ஆம் ஆண்டு வரை தொகுதி மறுவரையறை நிர்ணயம் முடக்கப்பட்டுள்ளது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு தொகுதி மறுவரையறை நிர்ணய குழுவை நியமிக்க வேண்டும். ஒரு தொகுதியில் 20 லட்சம் வாக்காளர்கள் இருப்பதால் அவர்களைச் சென்றடைவது கடினமாக இருப்பதால் தொகுதி மறுவரையறை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பத்தாண்டு கால மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சில வடமாநிலங்களை விட குறைவாக இருப்பதால், தொகுதி மறுவரையறை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டால் தங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்று தென்னிந்திய மாநிலங்களின் கவலைகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பிரகாஷ் அம்பேத்கர்: எந்த ஒரு மாநிலமும் ஆதிக்கம் செலுத்தாத வகையில் பெரிய வட மாநிலங்களை சிறிய மாநிலங்களாக உடைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.