scorecardresearch

’மதவெறியை விரட்டிய கர்நாடகாவிற்கு நன்றி: பிரகாஷ் ராஜ் ட்வீட்

வெறுப்பு மற்றும் மதவெறியை விரட்டி அடித்த கர்நாடகா மக்களுக்கு நன்றி என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

வெறுப்பு மற்றும் மதவெறியை விரட்டி அடித்த கர்நாடகா மக்களுக்கு  நன்றி என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டபேரவையின் மொத்தமுள்ள 224  தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 136 இடங்களை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் தோல்வியை நான் ஏற்றுக்கொள்வதாக பசவராஜ் மொம்பை கூறுயுள்ளார். மேலும் 2024ம் ஆண்டு  நடைபெறும் மக்களவை தேர்தலில்  வெற்றிபெற்று மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது கேள்விகுறியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் “ வெறுப்பையும் மத வெறியையும் விரட்டியடித்த கர்நாடகவுக்கு நன்றி “ என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களிக்க செல்வதற்கு முன்பே 40% கமிஷன் பெறும் அரசுக்கு எதிராக வாக்களிக்க, உங்களை கேட்டுக்கொள்கிறேன் “ என்று அவர் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Prakash raj says thanks to karnataka people defeating bjp