முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, கான்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி தனது 50 ஆண்டு கால அரசியல் பொது வாழ்க்கையில், அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக விளங்கினார். வெளியுறவுத் துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை, உள்துறை என முக்கிய துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார். இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை குடியரசுத் தலைவராக பதவி வகித்துள்ளார். நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவைக்காக கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு 2019ம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 31ம் தேதி மாலை காலமானார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இல்லை என்று கேட்க வருத்தமாக இருக்கிறது. அவரது மறைவு ஒரு சகாப்தத்தை கடந்து செல்கிறது. பொது வாழ்க்கையில் ஒரு மகத்தான துறவியின் மனநிலையுடன் அன்னை இந்தியாவுக்கு சேவை செய்தார். தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.
Sad to hear that former President Shri Pranab Mukherjee is no more. His demise is passing of an era. A colossus in public life, he served Mother India with the spirit of a sage. The nation mourns losing one of its worthiest sons. Condolences to his family, friends & all citizens.
— President of India (@rashtrapatibhvn) August 31, 2020
மேலும், “பாரத் ரத்னா பிரணாப் முகர்ஜி பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தை இணைத்தார். அவரது 5 தசாப்த கால புகழ்பெற்ற பொது வாழ்க்கையில், அவர் முக்கிய துறைகளில் அமைச்சராக பதவி வகித்ததைப் பொருட்படுத்தாமல் அவர் எளிமையாக இருந்தார். அவர் அரசியல் வாழ்க்கை முழுவதும் மக்களை நேசித்தார்.
நாட்டின் முதல் குடிமகனாக அவர் தொடர்ந்து அனைவருடனும் தொடர்பு கொண்டார். ராஷ்டிரபதி பவனை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தார். பொது மக்களின் வருகைக்காக அதன் வாயில்களைத் திறந்தார். மரியாதைக்குரிய தங்கள் மேண்மை தங்கிய என்ற பயன்பாட்டை நிறுத்துவதற்கான அவரது முடிவு வரலாற்று சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.
India grieves the passing away of Bharat Ratna Shri Pranab Mukherjee. He has left an indelible mark on the development trajectory of our nation. A scholar par excellence, a towering statesman, he was admired across the political spectrum and by all sections of society. pic.twitter.com/gz6rwQbxi6
— Narendra Modi (@narendramodi) August 31, 2020
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின்மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தபோது பிரணாப் முகர்ஜி ராஷ்டிரபதி பவனை பொது மக்கள் எளிதில் அணுகும்படி செய்தார். அவர் குடியரசுத் தலைவர் இல்லத்தை கற்றல், புதுமை, கலாச்சாரம், அறிவியல் மற்றும் இலக்கிய மையமாக மாற்றினார். முக்கிய கொள்கை விஷயங்களில் அவரது புத்திசாலித்தனமான ஆலோசனை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
பல தசாப்தங்களாக நீடித்த அவரது அரசியல் வாழ்க்கையில், பிரணாப் முகர்ஜி முக்கிய பொருளாதார மற்றும் அமைச்சகங்களில் நீண்டகால பங்களிப்புகளை வழங்கினார். அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். எப்போதும் நன்கு தயாராகி இருப்பார். மிகவும் வெளிப்படையானவர் மற்றும் நகைச்சுவையானவர்.
பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானதால் இந்தியா வருத்தப்படுத்துகிறது. அவர் நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு அழியாத அடையாளத்தை வைத்துள்ளார். அவர் ஒரு அறிஞருக்கு சமமானவர். ஒரு உயர்ந்த அரசியல்வாதி. அவர் அரசியல் வானில் சமூகத்தின் அனைத்து பிரிவுகளாலும் போற்றப்பட்டார்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
With great sadness, the nation receives the news of the unfortunate demise of our former President Shri Pranab Mukherjee.
I join the country in paying homage to him.
My deepest condolences to the bereaved family and friends. pic.twitter.com/zyouvsmb3V
— Rahul Gandhi (@RahulGandhi) August 31, 2020
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் துரதிர்ஷ்டமான மறைவு செய்தியை நாடு மிகவும் சோகத்துடன் கேட்கிறது. அவருக்கு மரியாதை செலுத்த நான் நாட்டு மக்களுடன் இணைகிறேன். துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.