கோஸ்வாமி துளசிதாஸ் எழுதிய ராம்சரித்மனாஸ் காவியத்தில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு "ஆட்சேபனைக்குரிய மொழி" கொண்டது என்று முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் எம்எல்சியுமான சுவாமி பிரசாத் மௌரியா ஞாயிற்றுக்கிழமை கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஜ் தக் செய்தி சேனலில் பேசிய மவுரியா, கோடிக்கணக்கானோர் படிக்கிறார்கள் என்பது பொய். இது துளசிதாஸால் சுய புகழுக்காகவும் தனது சொந்த மகிழ்ச்சிக்காகவும் எழுதப்பட்டது. மதத்தை வரவேற்கிறோம். ஆனால், மதத்தின் பெயரால் துஷ்பிரயோகம் செய்வது ஏன்? தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மீதான துஷ்பிரயோகங்கள். அவர்களின் சாதிகளுக்குப் பெயரிட்டு, அவர்களை சூத்திரன் என்று அழைப்பதன் மூலம், துஷ்பிரயோகம் செய்வதுதான் மதமா?
ஓபிசி தலைவரான மவுரியாவின் கருத்துக்கள், பீகார் கல்வி அமைச்சரும் ஆர்ஜேடி தலைவருமான சந்திர சேகர் தெரிவித்த இதே போன்ற கருத்துகளை அடுத்து வந்துள்ளது. ’நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். ஆனால் மதத்தின் பெயரால், ஒரு சமூகம் அல்லது சாதி இழிவுபடுத்தப்பட்டால், அது ஆட்சேபனைக்குரியது’ என்று மௌரியா கூறினார், இவர் கடந்த ஆண்டு உத்தர பிரதேச தேர்தலுக்கு முன்னதாக பாஜகவிலிருந்து சமாஜ்வாடி கட்சிக்கு மாறினார்.
மவுரியாவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ’சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்தபோது, அவரிடம் இருந்து இதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் கேட்டதில்லை. அவர் சமாஜ்வாடி கட்சிக்கு சென்றவுடன் அதன் கொள்கைக்கு ஏற்ப, இந்துக்களை அவமரியாதை செய்யத் தொடங்கினார். சமூகத்தை பிளவுபடுத்துவதற்காக அவர் ராம்சரித்மனாஸை எதிர்க்கிறார்....இதற்கான விளைவுகளை சமாஜ்வாதி கட்சி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“