Advertisment

எதிர்கட்சித் தலைமை தனி ஒருவரின் தெய்வீக உரிமை அல்ல; ராகுலை விமர்சித்த பிரசாந்த் கிஷோர்

மும்பையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை இதே போன்ற ஒரு கிண்டலான விமர்சனத்தை முன்வைத்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் இந்த விமர்சனம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குறிக்கும் விதமாக வந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Prashant Kishor, Prashant Kishor criticize congress leadership, Rahul Gandhi, Prashant Kishor criticize opposition leadership of congress, Priyanka Gandhi, எதிர்க்கட்சித் தலைமை தனி ஒருவரின் தெய்வீக உரிமை அல்ல, ராகுல் காந்தியை விமர்சித்த பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ், மம்தா பானர்ஜி, Mamata Banerjee, TMC, India, congress

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸைக் கழித்துவிடு எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் என்று கூறியது குறித்து பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறைப்படி தீர்மானிக்கப்பட வேண்டும் என்று பிரபல அரசியல் உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர் வியாழக்கிழமை தெரிவித்தார். மேலும், காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல என்றும் அவர் கூறினார்.

Advertisment

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குறிக்கும் விதமாக அமைந்த இந்த விமர்சனம், மும்பையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இதேபோன்ற ஒரு கிண்டலான விமர்சனம் புதன்கிழமை வந்தது.

“காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யோசனையும் இடமும் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு இன்றியமையாதது. ஆனால், காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல, குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சி 90% க்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வியடைந்திருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படட்டும்” என்று பிரசாத் கிஷோர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்து காங்கிரஸிலிருந்து கடுமையான பதிலடியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ட்விட்டரில் குறிப்பிடுகையில், “இங்கு விவாதிக்கப்படும் தனிநபர் ஆர்.எஸ்.எஸ்.-ஸிடம் இருந்து போராடி இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தனது தெய்வீகக் கடமையைத் தொடர்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அரசியல் கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை வழங்கும் சித்தாந்த பிடிப்பு இல்லாத ஒரு தொழில்முறையாளரால், நமது அரசியலின் நிகழ்ச்சி நிரலை உருவாக்க முடியாது” என்று கேரா கூறினார்.

இதற்கு முன் தினம், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் சாத்தியம் குறித்து சூசகமாக தெரிவித்தார். எனினும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) வழியில் கூட்டணி இருக்காது என்று அவர் கூறினார்.

“எல்லா மாநிலக் கட்சிகளும் ஒன்றிணைந்தால் பாஜகவை தோற்கடிப்பது மிகவும் எளிது” என்று மும்பையில் மம்தா பானர்ஜி கூறினார், “நீங்கள் அதிக நேரம் வெளிநாட்டில் இருக்க முடியாது. அரசியலில் தொடர் முயற்சி அவசியம்” என்றார்.

ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களால் எதிர்க்கட்சிகள் அவரை பலமுறை விமர்சித்து வருகின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேரக்கூடும் என்ற வதந்திகள் கிளம்பியது. இருப்பினும், லக்கிம்பூர் கேரி சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை அவர் பகிரங்கமாக விமர்சித்த பின்னர் தேர்தல் உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிளவு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டன.

லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் தலையிடுவதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சியை எதிர்பார்த்தவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள் என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

“லக்கிம்பூர் கேரி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மிகப் பழமையான கட்சி தலைமையில் எதிர்ப்பதன் மூலம் விரைவான, தன்னிச்சையான மறுமலர்ச்சியை எதிர்பார்த்த மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, மிகப் பழமையான பெரிய கட்சியின் ஆழமாக வேரூன்றிய சிக்கல்கள் மற்றும் கட்டமைப்பு பலவீனத்திற்கு விரைவான தீர்வுகள் எதுவும் இல்லை” என்று பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்தார்.

லக்கிம்பூர் கேரி மரணம் குறித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் ஆக்ரோஷமான அரசியல் நிலைப்பாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பிரிவை உற்சாகப்படுத்திய நேரத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை இலக்காகக் கொண்டு விமர்சிக்கப்படுவதாக கிஷோரின் கருத்துக்கள் இருந்தன. ஆனால், இறுதியாக ராகு காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒன்றாகச் செயல்படுவார் நம்பினார்கள். குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்கள் தேசிய அரசியல் ஆசைகளை முன்னிறுத்த முயல்வதால், காங்கிரஸுக்கு கோபத்தைக் காட்ட வேண்டும் என்று இந்த தலைவர்கள் நம்புகிறார்கள்.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் முறைப்படி சேர்வதற்காக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக நம்பப்படுகிறது. கட்சியின் தேர்தல் மற்றும் பிரச்சார நிர்வாகத்தில் பங்கு வகிப்பதற்கு பதிலாக, கட்சியில் சேருமாறு பிரசாந்த் கிஷோரை அவர் அறிவுறுத்தியதாக ராகுலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

உண்மையில், காங்கிரஸ் தலைமை, கட்சியை புத்துயிர் கொடுக்கவும் புதுப்பிக்கவும் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் போருக்குத் தயாராகவும் பிரசாந்த் கிஷோர் முன்மொழிந்த செயல் திட்டம் பற்றி விவாதித்ததாக தெரிகிறது. ஜூலை மாதம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், காங்கிரஸ் காரியக் கமிட்டியின் உறுப்பினர்கள் குழுவாக கூடி, கட்சியின் சீர்திருத்தம் மற்றும் மறுமலர்ச்சி நிகழ்ச்சி நிரல் என்ன என்று விவாதிக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டது.

ஜூலை மாதம் ராகுல் காந்தியுடனான தனது சந்திப்பின்போது விவாதத்தில் உள்ள திட்டத்தை பிரசாந்த் கிஷோர் சமர்ப்பித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. - அவர் ஜூலை 13ம் தேதி ராகுலையும் பிரியங்காவையும் சந்தித்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சந்தித்தார்.

தேசிய அரசியலில் ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சிஐ அதிகளவில் விமர்சித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் உடனான தொடர்பைக் கருத்தில் கொண்டு, அவரது நுழைவு கடினமான சூழ்நிலையில் பாதித்ததாக காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பகுதியினர் தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rahul Gandhi Congress Mamata Banerjee Prashant Kishor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment