scorecardresearch

காந்தியைப் பின்பற்றுபவர்கள் கோட்சே ஆதரவாளர்களுடன் நிற்க முடியாது; பிரசாந்த் கிஷோர்

பாஜக – ஜே.டி.யு கூட்டணி தொடர்பாக அவருக்கும் நிதீஷுக்கும் இடையே சில கருத்தியல் வேறுபாடுகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர், “காந்தியின் சித்தாந்தத்தை நம்புபவர்களால் கோட்சே ஆதரவாளர்களுடன் நிற்க முடியாது. இது தொடர்பாக அவருடன் எனக்கு ஒரு கருத்தியல் வேறுபாடு உள்ளது” என்று கூறினார்.

prashant kishor, prashant kishor on nitish kumar, பிரசாந்த் கிஷோர், பீகார், நிதீஷ் குமார், காந்தியை பின்பற்றுபவர்கள், கோட்சே ஆதரவாளர்களுடன் நிற்க முடியாது, prashant kishor on bihar politics, bihar elections, Prashant Kishor ideological difference with Nitish, Gandhi followers can't stand with Godse’s supporters, Tamil indian express
prashant kishor, prashant kishor on nitish kumar, பிரசாந்த் கிஷோர், பீகார், நிதீஷ் குமார், காந்தியை பின்பற்றுபவர்கள், கோட்சே ஆதரவாளர்களுடன் நிற்க முடியாது, prashant kishor on bihar politics, bihar elections, Prashant Kishor ideological difference with Nitish, Gandhi followers can't stand with Godse’s supporters, Tamil indian express

தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சில வாரங்கள் கழித்து, பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாருடன் தனக்கு இன்னும் நல்ல உறவு இருப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பாட்னாவில்‘ பாத் பீகார் கி ’என்ற தலைப்பில் ஒரு பிரச்சாரத்தைத் அறிமுகப்படுத்திய பிரசாந்த் கிஷோர், “நான் நிதீஷ் உடன நல்ல உறவு வைத்திருக்கிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது முடிவை நான் கேள்வி கேட்க மாட்டேன்.” என்று கூறினார். இந்த பிரசாரம் பிப்ரவரி 20-ம் தேதி தொடங்க உள்ளது.

இருப்பினும், பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) கூட்டணி வைத்திருப்பது தொடர்பாக அவருக்கும் நிதீஷுக்கும் இடையே சில கருத்தியல் வேறுபாடுகள் இருப்பதாக கிஷோர் ஒப்புக் கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், “காந்தியின் சித்தாந்தத்தை நம்புபவர்களால் கோட்சே ஆதரவாளர்களுடன் நிற்க முடியாது. இது தொடர்பாக அவருடன் எனக்கு ஒரு கருத்தியல் வேறுபாடு இருந்தது” என்று கிஷோர் கூறினார்.

பிரசாந்த் கிஷோர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பவன் கே வர்மாவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக ஜே.டி.யு.-வில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை மறைமுகமாகக் குறிப்பிட்டு குஜராத் தலைவர்களின் வார்த்தைகளைப் பின்பற்றுவதற்காக நிதீஷ் குமாரை விமர்சித்த பிரசாந்த் கிஷோர், மாநிலத்திற்கு ஒரு வலுவான தலைவர் தேவை. தொங்கு தலைவர் அல்ல என்று கூறினார்.

பிரசாந்த் கிஷோர் பீகாரின் வளர்ச்சிப் போக்கைக் குறிப்பிட்டு நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சித்தார். “கடந்த 15 ஆண்டுகளில் பீகாரில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் நீங்கள் பீகாரை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வேகம் இருந்திருக்கவில்லை. 2005-ல் பீகார் ஏழ்மையான மாநிலமாக இருந்தது. அது இன்னும் தொடர்கிறது. நிதீஷ் குமாரின் ஆட்சி நிர்வாக மாதிரியை கேள்வி கேட்க யாரும் இல்லை. வளர்ச்சி குறியீடுகளில் பீகார் இன்னும் மிகக் குறைந்த இடத்தில் உள்ளது” என்று அவர் கூறினார்.

பீகார் மாநிலத்தில் மோசமான கல்வித் தரங்களுக்கு முதலமைச்சரை விமர்சித்த கிஷோர் பிரசாந்த், “நிதீஷ் குமார் பள்ளி சிறுமிகளுக்கு இலவச மிதிவண்டிகளை விநியோகித்தார். ஆனால், மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்தவில்லை.” என்று தெரிவித்தார்.

பீகாரின் வளர்ச்சி தொடர்பான புள்ளிகள் குறித்த பொது விவாதத்திற்கு நிதீஷ் குமாரை அழைப்பு விடுத்த பிரசாந்த் கிஷோர் “பீகாரின் வளர்ச்சி தொடர்பான தரவு புள்ளிகள் குறித்து திறந்த மன்றத்தில் என்னுடன் விவாதிக்க நிதீஷ் குமார் அல்லது அவரது அமைச்சர்கள் தயாரா என நான் கேட்கிறேன்” என்று கூறினார்.

தேஜஷ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியுடன் ஒத்துழைப்பதை அவர் முன்னர் திட்டவட்டமாக நிராகரித்திருந்தாலும், 2020 சட்டமன்றத் தேர்தலின் போது பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதை காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதனிடையே பிரசாந்த் கிஷோரின் பேச்சுக்கு பதிலளித்த ஜே.டி.யூ தலைவர் அஜய் அலோக், “சிலர் மனரீதியாக நிலையற்ற நிலையில் இருக்கும்போது இதுபோன்று பேசுகிறார்கள். ஒருபுறம், நிதீஷ்குமார் என் தந்தையைப் போன்றவர் என்று அவர் கூறுகிறார். மறுபுறம், அதே நபரின் குறைபாடுகளை அவர் தோண்டி துருவுகிறார். அது உண்மை இல்லை.” என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி யின் தெளிவற்ற தன்மையை குறித்தும் விமர்சித்ததற்காக பிரசாந்த் கிஷோர் கடந்த மாதம் ஆளும் ஜே.டி.யுவிலிருந்து வெளியேற்றப்பட்டார். என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி தொடர்பாக நிதீஷ் குமாருடனான தனது கருத்து வேறுபாடுகளை அவர் தீர்த்துக் கொள்ள முயற்சித்த பிறகும், அமித் ஷா மீதான அவரது தொடர்ச்சியான விமர்சனம் ஜே.டி.யு அவரை மற்றொரு அதிருப்தித் தலைவரான பவன் குமார் வர்மாவுடன் சேர்ந்து வெளியேற்றச் செய்தது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Prashant kishor ideological difference nitish gandhi followers godse supporters