/indian-express-tamil/media/media_files/KiL0bOd4DjAkufaopJJw.jpg)
அரசியல் வியூகவாதி, செயல்பாட்டாளர் பிரசாந்த் கிஷோர் (Photo PTI)
முன்னாள் தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை தனது ஜன் சூராஜ் பிரச்சாரம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் தேதி அரசியல் கட்சியாக மாறும் என்று அறிவித்தார். மேலும், பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சி போட்டியிடும் என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: Prashant Kishor’s Jan Suraaj to become political party on Gandhi Jayanti
பாட்னாவில் ஜன் சுராஜின் மாநில அளவிலான பயிலரங்கில், கிஷோர் கூறினார், “முன்பு கூறியது போல், ஜன் சுராஜ் அக்டோபர் 2-ம் தேதி அரசியல் கட்சியாக மாறி, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும். கட்சித் தலைமை போன்ற பிற விவரங்கள் உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.
இந்த பயிலரங்கில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் பேத்தி உட்பட பலர் கலந்துகொண்டனர், அவர், இரண்டு வருடமாக நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் இணைந்தார்.
பாரத ரத்னா விருது பெற்ற சோசலிஸ்ட் தலைவரின் இளைய மகன் வீரேந்திர நாத் தாக்கூரின் மகள் ஜாக்ரிதி தாக்கூரின் நுழைவையும் கிஷோர் வரவேற்றார். மறைந்த தாக்கூரின் மூத்த மகன் ராம்நாத் தாக்கூர் ஜே.டி.யூ எம்.பி மற்றும் மத்திய அமைச்சராக உள்ளார்.
ஜான் சுராஜில் இணைந்த மற்றவர்களில் ஆர்.ஜே.டி-யின் முன்னாள் எம்.எல்.சி ராம்பாலி சிங் சந்திரவன்ஷியும் அடங்குவர், இவர் சமீபத்தில் சட்ட மேலவையில் இருந்து ஒழுக்கமின்மை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆனந்த் மிஸ்ரா, பா.ஜ.க சீட்டை எதிர்பார்த்து பதவியை ராஜினாமா செய்தார், ஆனால், அவருக்கு சீட் கொடுக்க மறுக்கப்பட்டதால் மக்களவைத் தேர்தலில் பக்ஸர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.