ஊரடங்கு நேரத்தில் ரகசிய பயணம்: நிரூபிக்க தயாரா? என பிரசாந்த் கிஷோர் சவால்
Prashant Kishor : விமான செயல்பாடுகள், மத்திய அரசின் விமான இயக்குனரகத்தின் அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தற்போது மத்தியில் ஆண்டு வருகிறது. எனவே என்மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு அதுகுறித்த தகவல்களை பெற எந்தவொரு கஷ்டமும் இருக்காது.
Prashant Kishor : விமான செயல்பாடுகள், மத்திய அரசின் விமான இயக்குனரகத்தின் அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தற்போது மத்தியில் ஆண்டு வருகிறது. எனவே என்மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு அதுகுறித்த தகவல்களை பெற எந்தவொரு கஷ்டமும் இருக்காது.
நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நேரத்தில் கார்கோ விமானத்தில் பிரசாந்த் கிஷோர் கோல்கட்டாவுக்கு சென்றதாக பீகார் பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதை நிரூபிக்க தயாரா என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், நரேந்திர மோடிக்கு ஆதரவாக திட்டங்களை வகுத்து பாரதிய ஜனதா கட்சியை பெரும்பான்மையுடன் கூடிய வெற்றியை பெற வைத்ததில், தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் பங்கு அளப்பரியது. பின்னர் 2018ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில், நிதீஷ் குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு அவரையும் வெற்றிபெறச் செய்தார். பின்னர் அக்கட்சியிலும் அவருக்கு பதவிகள் வழங்கப்பட்டன.
Advertisment
Advertisements
முதல்வர் நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இனி அரசியல் வேண்டாம், பொது வாழ்க்கையே போதும் என்று பிரசாந்த் கிஷோர் முடிவெடுத்து தற்போது எக்கட்சியும் சாராமல், தமிழகத்தில் திமுக, மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிளுக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறத்தக்க வகையிலான திட்டங்களை வகுத்துத்தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளத. மருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர், கார்கோ விமானத்தில் கோல்கட்டாவுக்கு ரகசியமாக சென்று வந்துள்ளதாக பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிகில் ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார். பிரசாந்த் கிஷோர் அரசு அதிகாரியும் இல்லை, விமான நிறுவன அதிகாரியும் இல்லை, மருத்துவ துறையை சேர்ந்தவரும் இல்லை. இவ்வாறு எந்த பதவியிலும் ஒருவர் விமான பயணம் மேற்கொள்ள யார் அனுமதி அளித்தது. இதுதொடர்பாக, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா, மற்றும் மத்திய விமானத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி தோல்வியடைந்துவிட்டது. கொரோனா ஒழிப்பிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் அவர்கள் முறைகேடு செய்துள்ளதாக ஆனந்த் கூறினார்.
மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது இமேஜை உயர்த்திக்கொள்ளவே, பிரசாந்த் கிஷோரை இந்நேரத்தில் அழைத்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளதாக ஆனந்த் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர் கூறியதாவது, நான் விமானப்பயணம் செய்தது உண்மை என்று அவர்கள் தெரிவித்தால், அதற்குரிய ஆவணங்களை வெளியிட வேண்டும். விமானம் எங்கிருந்து புறப்பட்டது எங்கு சென்றது உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
விமான செயல்பாடுகள், மத்திய அரசின் விமான இயக்குனரகத்தின் அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தற்போது மத்தியில் ஆண்டு வருகிறது. எனவே என்மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு அதுகுறித்த தகவல்களை பெற எந்தவொரு கஷ்டமும் இருக்காது.
நான் தற்போது சாதாரணமானவன். என்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், மன்னிப்பு கேட்க தயார். அதேபோல் அவர்களும் மன்னிப்பு கேட்பார்களா என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil