அரசியல் வட்டாரங்களை குழப்பத்தில் ஆழ்த்திய ராகுல் காந்தி – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

Prashant Kishor meets Congress leader Rahul Gandhi in Delhi, sets political circles abuzz: சந்திப்புக்குப் பிறகு ஹரீஷ் ராவத், பஞ்சாப் நெருக்கடி தொடர்பாக பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தியை சந்திக்கவில்லை என்று கூறினார்.

அரசியல் வட்டாரங்களை குழப்பத்தில் ஆழ்த்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செவ்வாயன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், பஞ்சாப் விவகாரங்களுக்கு பொறுப்பான ஹரிஷ் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் எதைப் பற்றியது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் கொந்தளிப்புகளுக்கு இடையில் கூட்டம் நடந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் திட்டமிடப்பட்ட நிலையில், கட்சியின் தலைவர்கள் அதன் தீர்மானத்தின் தாமதம் குறித்து அமைதியற்ற நிலையில் உள்ளனர்.

இதற்கிடையில், சந்திப்புக்குப் பிறகு ஹரீஷ் ராவத், பஞ்சாப் நெருக்கடி தொடர்பாக பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தியை சந்திக்கவில்லை என்று கூறினார்.

“ராகுல் காந்தி ஒரு தேசியத் தலைவர். பல தலைவர்கள் அவரைச் சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். பிரஷாந்த் கிஷோர் பஞ்சாப் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ராகுல் காந்தியை சந்திக்கவில்லை, ”என்று ஹரீஷ் ராவத் செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார்.

கடந்த வாரம், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், பிரசாந்த் கிஷோரை டெல்லியில் முதல்வரின் இல்லமான கபுர்தலா மாளிகையில் சந்தித்தார்.

அமரீந்தரால் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்ட கிஷோர், மேற்கு வங்கம் உட்பட ஒரு சில மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பஞ்சாபிற்கு வந்திருந்தார். எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூக நிபுணராக செயல்பட போவதில்லை என அறிவித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Prashant kishor meets congress leader rahul gandhi in delhi sets political circles abuzz

Next Story
கொரோனா விதிமீறல்; சிங்கப்பூரில் இந்திய வாலிபருக்கு சிறை தண்டனை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express