Advertisment

காங்கிரஸுக்கு ‘நோ’ சொன்ன பிறகு… பிரசாந்த் கிஷோர் புதுக்கட்சி தொடங்க திட்டம்?

பிரபல தேர்தல் வியூகம் வகுப்பவரான பிரசாந்த் கிஷோர் மக்களை சந்திக்கத் தொடங்கியுள்ளார். நல்லாட்சி பற்றிய கருத்துக்களை வரவேற்கும் பிரச்சாரமாக ஜன் சுராஜ் தொடங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
prashant kishor, prashant kishor bihar, prashant kishor party, பிரசாந்த் கிஷோர், ஐ பேக், தேர்தல் வியூகவாதி, ஐக்கிய ஜனதா தளம், பிகார், புதுக்கட்சி தொடங்க திட்டம், ipac, election strategist, congress, jdu, prashant kishor news, pk news, pk election strategist

பிரபல தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கான வாய்ப்பை நிராகரித்த பிறகு, சொந்தமாக அரசியல் கட்சியை தொடங்குவதற்கான திட்டத்தை கைவிட்டார். ஆனால், அந்த போக்கில், தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், மக்களை சந்திக்கத் தொடங்கி, நல்லாட்சி பற்றிய கருத்துக்களைத் தேடும் பிரச்சாரமாக ஜன் சுராஜ் தொடங்கினார்.

Advertisment

“ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடல் 10 ஆண்டு கால கடினமான பயணத்துக்கு வழிவகுத்தது! நான் புதிய தொடக்கத்தை மேற்கொண்டு உண்மையான எஜமானர்களான மக்களை சந்திக்கும் நேரம் இது. மக்கள் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும், ‘ஜன் சுராஜ்’ - மக்கள் நல்லாட்சிக்கான பாதையையும் நன்கு புரிந்துகொள்வதற்கான நேரம் இது” என்று திங்கள்கிழமை பிரசாந்த் கிஷோர் பதிவிட்ட ட்வீட்டில், பிகாரில் இருந்து தொடங்குகிறது என்ற பொருளில் ‘ஷுருஆத் பிகார் சே’ என்ற முழக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், “டாக்டர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட சிவில் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 80-100 முன்னணி ஆளுமைகளின் பட்டியலை நாங்கள் தயார் செய்துள்ளோம்… அவர் அனைவரையும் அடுத்த மூன்று நாட்களில் அனைவரையும் சந்திப்பார்” என்று தெரிவித்தனர். முன்னணி ஆர்டிஐ செயல்பாட்டாளர் சிவ பிரகாஷ் ராய், சமூக செயற்பாட்டாளர் முகேஷ் ஹிசாரியா, மோதிஹாரி டாக்டர் பர்வேஸ் அஜீஸ் மற்றும் சமூக தொழிலதிபர் இர்பான் ஆலம் ஆகியோரை பிரசாந்த் கிஷோர் சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.

இந்த யோசனை மூலம், பீகாரில் பணிபுரிந்தவர்களைச் சந்திக்கவும், பீகாருக்குத் தேவையானதை பரிந்துரைக்கவும் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர் அரசியல்வாதிகளையும் சந்தித்து வருகிறார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதற்கு முன்னர் பிரசாந்த் கிஷோர் இருந்த, ஐக்கிய தனதா தளம் கட்சி, பீகாரில் ‘நிதீஷ் குமார் மாடல்’ மட்டுமே செயல்படும் என்று கூறி, அவரது முயற்சியை நிராகரித்தது. பாஜக பிரசாந்த் கிஷோரை ‘அவர் தேர்தல் வியூகவாதியே தவிர வேறு ஒன்றுமில்லை’ என்று கூறியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “நிதிஷ் 2005 முதல் முதலமைச்சராக இருப்பதே அவரது நல்லாட்சி மாடலுக்கு போதுமான சான்று. பிரசாந்த் கிஷோர் கூட 2015 சட்டமன்றத் தேர்தலின் போது ‘நிதீஷ் குமார் என்றால் பிகாரில் நலம் இருக்கிறது’ என்ற அர்த்தத்துடன் இதை ஆமோதித்தார்.

2018 செப்டம்பரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பிரசாந்த் கிஷோர், அக்கட்சியின் முதல் மற்றும் ஒரே தேசிய துணைத் தலைவராக இருந்தார். பின்னர், நிதிஷ் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.சி.பி சிங்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரசாந்த் கிஷோர் ஜனவரி 2020 இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகினார்.

அதே ஆண்டில், அவர் ‘பிகார் பற்றி பேசுங்கள்’ என்ற ‘பாத் பீகார் கி’ பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்த பிரசாரம் முதல் சில கூட்டங்களைத் தாண்டி செல்லவில்லை.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் கூறுகையில், “பிரஷாந்த் கிஷோர் அரசியலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் ஈடுபட்டிருக்கிறார். அரசியல் செயல்பாட்டாளராக அவர் செய்ததை தூசி தட்டியுள்ளார். அவர் எப்போதும் தன்னை பின்னால் இருந்து செயல்படுபவராக மட்டுமே நிரூபித்துள்ளார். அரசியல் கட்சிகள் அவரை தொழில்முறை அடிப்படையில் மட்டுமே ஈடுபடுத்துகின்றன. நாங்கள் அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை விரும்பினாலும், அவரது நடவடிக்கை பயனற்றதாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Prashant Kishor Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment