ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) கட்சி தலைவர்களான சேர்ந்த பிரசாந்த் கிஷோர், பவன் கே வர்மா ஆகிய இருவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக அவர்களது கூட்டணி கட்சியான பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர், பொதுச் செயலாளார் பவன் கே வர்மா. இவர்கள் இருவரும் குடியுரிரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தங்கள் கூட்டணி கட்சியான மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார், தந்து கட்சியின் முன்னணி தலைவர்களாக இருந்த பிரசாந்த் கிஷோர், பவன் வர்மா ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.
இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரசாந்த் கிஷோரும் பவன் கே வர்மாவும் கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.
Thank you Nitish Kumar ji for freeing me from my increasingly untenable position of defending you and your policies. I wish you well in your ambition of being CM of Bihar at any cost.
— Pavan K. Varma (@PavanK_Varma) January 29, 2020
இதில் பவன் கே வர்மா, “உங்களையும் உங்கள் கொள்கைகளையும் பாதுகாக்கும் எனது அதிகரித்துக்கொண்டிருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து என்னை விடுவித்ததற்கு நன்றி நிதீஷ் குமார் ஜி. எந்த விலைகொடுத்தாவது நான் பீகார் முதல்வராக இருக்க வேண்டும் என்ற உங்கள் லட்சியத்தை நன்றாக வாழ்த்துகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.
Thank you @NitishKumar. My best wishes to you to retain the chair of Chief Minister of Bihar. God bless you.????????
— Prashant Kishor (@PrashantKishor) January 29, 2020
அதே போல, பிரசாந்த் கிஷோர் தந்து டுவிட்டர் பக்கத்தில், “நன்றி நிதீஷ் குமார். நீங்கள் பீகார் முதல்வர் நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ள எனது வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.