Advertisment

பீகாரில் இருந்து தொடங்குகிறேன்... அரசியல் பயணம் குறித்து பிரசாந்த் கிஷோர் சூசகம்

உண்மையான எஜமானர்களிடம் செல்ல வேண்டிய நேரமிது; அரசியல் பயணம் குறித்து பிரசாந்த கிஷோர் சூசகமாக ட்வீட்

author-image
WebDesk
New Update
Tamil news Highlights: காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர்?

‘As I turn the page… starting from Bihar’: Prashant Kishor hints at future in politics: தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் திங்களன்று அரசியலில் தனது எதிர்காலம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். "உண்மையான எஜமானர்களிடம்" அதாவது மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் இது என்றும், பீகாரில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்குவதாகவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்த பிரசாந்த் கிஷோர், "ஆழமாக வேரூன்றியிருக்கும் காங்கிரஸின் கட்டமைப்பு பிரச்சனைகளை சரிசெய்வதற்கு" தன்னை விட "தலைமை மற்றும் கூட்டு விருப்பம்" தேவை என்று கூறினார்.

திங்களன்று, ஜனநாயகத்தில் பங்கேற்பதிலும், மக்கள் சார்பு கொள்கைகளை வடிவமைக்க உதவுவதிலும் 10 வருட "ரோலர்கோஸ்டர் சவாரி"க்குப் பிறகு ஒரு புதிய பக்கத்தைத் திருப்பப் போவதாக பிரசாந்த கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ராகுல் காந்தி வருகைக்கு அனுமதி மறுப்பு; உஸ்மானியா பல்கலை.க்கு வலுக்கும் எதிர்ப்பு

“நான் பக்கத்தைத் திருப்பும்போது, ​​மக்களின் நல்லாட்சிக்கான பிரச்சினைகளையும், பாதையையும் நன்கு புரிந்துகொள்வதற்கு உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. பீகாரில் இருந்து தொடங்குகிறேன்,” என்று பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த காலத்தில், பிரசாந்த் கிஷோர் பீகார் அரசியலின் ஒரு பகுதியாக இருந்தார், செப்டம்பர் 2018 இல் JD(U) கட்சியில் சேர்ந்தார். பின்னர் "கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக" 2020 இல் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். பிப்ரவரி 2022 இல், பிரசாந்த் கிஷோர் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்தார், இது மீண்டும் அவர் கட்சியில் இணைவதற்கான ஊகங்களைத் தூண்டியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress Prashant Kishor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment