அரசியல் சாணக்கியர் கிஷோரின் அரசியல் அல்லா வியூகம் இதுதான்

Prashant Kishor : மோடி முதல் மம்தா வரை, நிதீஷ் முதல் கெஜ்ரிவால் வரை, ஜெகன் முதல் அமரீந்தர் வரை என பிரசாந்த் கிஷோரின் அரசியல்...

மோடி முதல் மம்தா வரை, நிதீஷ் முதல் கெஜ்ரிவால் வரை, ஜெகன் முதல் அமரீந்தர் வரை என பிரசாந்த் கிஷோரின் அரசியல் அனுபவம் பெறாத அரசியல்வாதிகளே இல்லை எனலாம். பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் உதவி செய்ய முடியாது என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். யாரந்த கிஷோர்?. அவரின் கொள்கைகள் தான் என்ன?.

சவுரவ் ராய் பர்மன்

2020, பிப்ரவரி 18ம் தேதி, நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், புது பீகார் ஆக்சன் திட்டத்தில் இருந்து தனது I-PAC நிறுவனம் விலகுவதாக அதன் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்த நிகழ்வு, தேசிய அரசியலில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மகாத்மா காந்தியின் கோட்பாட்டை குறிப்பிட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். நிதீஷ் குமார் காந்தியை பின்பற்றப்போகிறாரா இல்ல கோட்சேவை பின்பற்றப்போகிறாரா என்பதை முடிவு செய்துகொள்ளட்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். 2018ம் ஆண்டு அவர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியில் இணைந்தார். கட்சி துணை தலைவர் என்ற அளவிற்கு உயர்ந்தார். நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து மோதல், கட்சி ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட விவகாரங்களை தொடர்ந்து, இந்தாண்டின் ஜனவரி மாதத்தில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதனடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும், அரசியல் வேறுபாடுகள் நிறையவே உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் பின்னயணியில் பிரசாந்த் கிஷோர் என்பவர் இருப்பார் என்பதே இவரின் அசகாய வெற்றி ஆகும். பிராண்ட் மோடியில் துவங்கி பேட்டா கெஜ்ரிவால், மம்தாவுக்கு தீதி கி போலோ, பஞ்சாபின் அம்ரீந்தர் சிங்கிற்கு ஹக்லே வைஸ் கேப்டன், ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜகன்னாஸ் நவரத்னலு, நிதீஷிற்கு பிர் ஷே நிதிஷே போன்றவை இவரது ஐடியாவில் இருந்து உதித்த வெற்றிக்கோஷங்கள் ஆகும்.

பிரசாந்த் கிஷோர் தனது 33வது வயதின்போது, ஐக்கியநாடுகள் சபையிகன் வடக்கு மத்திய ஆப்ரீக்க நாடான சாத் நாட்டில், பொது சுகாதாரம் குறித்த ஆய்வினை மேற்கொண்டு சமர்ப்பித்திருந்தார். இதன்மூலம், இவருக்கு மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்தது, இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் பிரசாந்த் கிஷோரின் புகழ் பரவியது. குஜராத் முதல்வராக இருந்த மோடி, பிரசாந்த் கிஷோரை, தனது அணியில் சேர்த்துக்கொண்டார்.

பீகார் மற்றும் உத்தரபிரதேச கிராமங்களில் வளர்ந்து இன்று ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில்,பிரசாந்த் கிஷோர் தன்னை வளர்த்துக்கொண்டது அனைவரையும் அவரை திரும்பிப்பார்க்க வைத்தது.அந்த நேரத்தில் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு நிலவுவதாகவும், குஜராத் மாநிலம் இதில் முதலிடத்தில் உள்ளதாக ஐநா அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் மோடி – பிரசாந்த் கிஷோரின் துணையுடன் திட்டங்களை வகுத்து, 2011ம் ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

2012ம் ஆண்டுவரை, இவரின் போட்டோ எந்த பத்திரிகையிலும் வெளிவந்ததில்லை என்று பிரசாந்த் கிஷோரின் நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் மீண்டும் மோடி வெற்றி பெற்றதற்கு பிறகு கிஷோர் வெளியில் தெரிய ஆரம்பித்தார். 2014ம் ஆண்டு பாரதிய ஜனதாவுடனான உறவை துண்டித்த பிறகுல நிதிஷ் உடன் கைகோர்த்தார். அதேஆண்டில், தனது அமைப்பை, I-PAC or Indian Political Action Committee என்ற அரசியல் கன்சல்டன்சி நிறுவனமாக மாற்றினார். இந்த அமைப்பிற்காக பலரை நியமித்து அதன்மூலம் ஒரு பெரிய நெட்வார்க்கை தோற்றுவித்தார்.

 

பீகார் தேர்தலுக்காக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து கூட்டணியை ஏற்படுத்தியிருந்தது. இதனுடன் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன. லாலு கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட கிஷோர் காரணமாக இருந்தார்.

2015 பீகார் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் கிஷோரின் வெற்றிப்பயணம் பஞ்சாப், ஆந்திரா, டில்லி என நீண்டுகொண்டே செல்கிறது. மேற்குவங்கத்திலும் வெற்றிகண்ட கிஷோர், விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டபை தேர்தலுக்காக, திமுகவுடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

I-PAC அமைப்பு, கட்சியினரை மட்டும் நம்பாமல், அதன் அடிமட்ட தொண்டர்களை அடிப்படையாக கொண்டு தனது செயல்பாட்டு கொள்கைகைள வகுத்துவருகிறது. எந்த தலைவராக இருந்தாலும், தனது கொள்கை வகுப்பில் தலையிட அனுமதிப்பதில்லை.
தங்களுக்கு கட்சியின் கொள்கைகள் குறித்து எவ்வித ஆய்வும் செய்வதில்லை. அடிமட்டேதொண்டர்களின் மனநிலையை வைத்தே நாங்கள் கொள்கைகளை வகுக்கிறோம். அதுதான் நாங்கள் தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கிறது.
பிரசாந்த் கிஷோர், நிதீஷ் கட்சியிலிரு்து வெளியேறியது குறித்து கூறியதாவது, மக்கள் தங்கள் ஆட்சியாளர்கள் காந்தியையா அல்லது கோட்சேவை பின்பற்றுகிறார்களா என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி, கோட்சேவை பின்பற்றுகிறது என்றால், அதற்கு பக்கபலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது.

நானும் சாதாரண ஆள் தான், நான் என் மனைவி மற்றும் மகன் உடன் வசித்து வருகிறேன். பாமர மக்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப கொள்கைகளை வகுப்பதனாலேயே, தான் உதவிபுரியும் கட்சி தேர்தலில் வெற்றி பெறுகிறது. மற்றபடி எனக்கு இந்த கட்சி, அந்த கட்சி, கட்சிப்பதவி போன்ற எந்தவொரு அங்கீகாரமும் தேவையில்லை என்று அவர் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close