Advertisment

தனிக் கட்சி இப்போது இல்லை; 3000 கி.மீ பாதயாத்திரை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

அரசியல் வியூக வகுப்பாளர் பிராசாந்த் கிஷோர், பிகாரில் 3,000 கி.மீ பாதயாத்திரை நடத்தப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
prashant kishor, prashant kishor political party, prashant kishor news, பிரசாந்த் கிஷோர், புதிய அரசியல் கட்சி, பிகார், காங்கிரஸ், பிரசாந்த் கிஷோர் பாதயாத்திரை, prashant kishor bihar padyatra, bihar padyatra pk, bihar news

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பிகாரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினால், அது தனது பெயரில் இருக்காது என்றும் புதிய கட்சி தொடங்குபவர்களுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

அரசியல் வியூக வகுப்பாளர் பிராசாந்த் கிஷோர், பிகாரில் 3,000 கி.மீ பாதயாத்திரை நடத்தப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

பிரசாந்த் கிஷோர் மக்களுக்காக பணியாற்றுவது குறித்த தனது முந்தைய அறிவிப்பின்படி, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் பிகார் முழுவதும் பயணம் செய்து மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள உள்ளேன் என்று கூறினார்.

அவர் தனது பயணத்தை மேற்கு சம்பாரனில் உள்ள காந்தி ஆசிரமத்தில் இருந்து தொடங்க உள்ளார். அதனால், அடுத்த 3-4 மாதங்களில், நல்லாட்சி என்கிற ‘ஜன் சுராஜ்’ சிந்தனையை உருவாக்கவும் மிகச் சிறந்த ஆளுமைகளை அதன் ஒரு பகுதியாக மாற்ற உதவும் பிகாரின் பல மிகச் சிறந்த ஆளுமைகளை சந்திப்பேன்.” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

வருங்காலத்தில் பீகாரில் தேர்தல் இல்லை என்று கூறிய பிரசாந்த் கிஷோர், ஒரு அரசியல் கட்சி செல்வாகில்ல் இல்லை என்றும் கூறினார். அரசியல் கட்சி தொடங்கினால், அது தனது பெயரில் இருக்காது என்றும், புதிய அட்சி தொடங்குபவர்களுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.

அண்மையில், காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கான காங்கிரஸின் அழைப்பை பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். அவர் கட்சியில் சேர்வதைவிட, காங்கிரஸ் கட்சிக்கு தலைமை மற்றும் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “எப்படி செயல்பட வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் தீர்மானிக்க வேண்டும், நான் அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு எந்த பிரசாந்த் கிஷோரும் தேவையில்லை. ஏனென்றால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்தவர்கள், அவர்கள் இன்னும் அதிக திறன் கொண்டவர்கள்” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பிரசாந்த் கிஷோர் தனது பிரச்சாரத்தைப் பற்றி பேசுகையில், “30 ஆண்டு காலம் லாலு பிரசாத் மற்றும் நிதிஷ் குமார் ஆட்சிக்குப் பிறகும் பிகார் நாட்டின் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழை மாநிலமாக உள்ளது. வளர்ச்சியின் பல அளவுகோல்களில் பீகார் இன்னும் நாட்டின் மிகக் கீழான நிலையில் உள்ளது. வரும் காலங்களில் பிகார் மாநிலம் முன்னணி மாநிலங்களின் பட்டியலில் வர வேண்டுமானால், அதற்கு புதிய சிந்தனையும், புதிய முயற்சிகளும் தேவை” என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், அவர் ஒரு புதிய கட்சி தொடங்குவது பற்றி பேசினார் - அவர் பிகாரில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக வதந்திகள் பரவியது. “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 ஆண்டு ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது! நான் புதிய அத்தியாயத்தை தொடங்கும் போது, உண்மையான தலைவர்கள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் ‘ஜன் சுராஜ்’ மக்கள் நல்லாட்சிக்கான பாதையை நன்கு புரிந்துகொள்வதற்கான நேரம் இது” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bihar Prashant Kishor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment