/tamil-ie/media/media_files/uploads/2022/10/prasant-k.jpg)
பிரபல தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் ’ஜன் சுரஜ்’ பாதயாத்திரையை காந்தி பிறந்த தினமான நேற்று, பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிகர்வரா காந்தி ஆசிரமத்தில் இருந்து தொடங்கினார்.
இந்நிலையில் இந்த பாத யாத்திரையில் 3,500 கிலோமீட்டர்களை அவர் கடக்க உள்ளார். 38 மாவட்டங்களுக்கு அவர் பயணப்படுகிறார். இது முடிவடைய 1 ½ ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.
இந்நிலையில் புத்திசாலியான தேர்தல் வியூகம் கொண்ட இவர் இப்போது தனியாக ஒரு கட்சியை பாதயாத்திரைக்கு பிறகு தொடங்க உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “ என்னால் மற்ற அரசியல் கட்சியின் வெற்றி உதவ முடியும் என்றால், நான் நிறுத்தும் வேட்பாளர்கள் எதிரிகளை மண்ணை கவ்வ வைப்பார்கள் “ என்று கூறியுள்ளார்.
முதல் நாள் பாதயாத்திரையில் 10 கி.மீ தூரத்தை கடந்த அவர் பேசுகையில் “ முன்னாள் பிரதமர் சந்திரசேகர், முன்னாள் பிஹார் முதல்வர் லல்லூ பிரசாத் யாதவ், தற்போதைய முதல்வர் நித்திஷ் குமார் ஆகியோர் காந்தியின் மனைவியின் பெயரில் உள்ள பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற உள்ளதாக கூறினர். ஆனால் அவர்கள் மாற்றவில்லை. ஆனால் இதை நான் நேரடியாக செய்ய முடியாது. பள்ளிக்கான எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
“ மக்களின் மனம் மாறியிருக்கிறது.முஸ்லிம் –யாதவ் போன்ற சாதிய அரசியலில் எங்கள் இயக்கம் ஈடுபடாது” என்று கூறியுள்ளார். மேலும் ஐஐடி மாணவர்கள், அரசு ஊழியர்கள் இப்படி முக்கியமானவர்கள் பிரசாந்த் கிஷோரின் அரசியல் இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.