மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று 4 ஆம் கட்டமாக இன்று 44 இடங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கிளப் ஹவுஸில் ஒரு உரையாடலின் போது பேசியவை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த பதிவில்,’ இந்த ஆண்டு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று டிஎம்சியின் உள் அறிக்கைகளே தெரிவிக்கிறது’, என்று கூறியதாகவுள்ளது. வெளியான ஆடியோ பதிவு குறித்து பதிலளித்த அவர்,பாஜக எனது அரட்டையை தங்கள் தலைவர்களின் வார்த்தைகளை விட தீவிரமாக எடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு தைரியமிருந்தால் தேர்ந்தெடுத்த பகுதிகளுக்கு உற்சாக மடைவதற்கு பதிலாக முழு உரையாடலையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் வங்காளத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று கூறினார்.
இதனை, பாஜகவின் மூத்த தலைவர் அமித் மால்வியா தனது ட்வீட்டர் பதிவில், மம்தா பானர்ஜியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், டிஎம்சியின் உள் அறிக்கைகளில் கூட பாஜக வெற்றி பெறுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார். மக்கள் மோடிக்கு வாக்களிக்கின்றனர். மேலும், எஸ்சிக்கள்(27%) , மாதுவாஸ் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த பதிவுகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை.
இதனிடையே பிரசாந்த் கிஷோர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் எனது முழு உரையாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. உண்மை நிலை தெரியும் வகையில் முழு பதிவையும் வெளியிடுமாறு நான் பாஜகவினரை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதற்கிடையில் தேர்தலுக்கு முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான சந்திப்பில் பிரசாந்த் கிஷோர், தனது மதிப்பீடுகளின்படி பாஜக மூன்று இலக்கங்களைக் கடக்க முடியாது என்று கூறியிருந்தார். அவர்கள் அவ்வாறு செய்தால் நான் எனது தேர்தல் ஆலோசகர் பணியை விட்டுவிடுகிறேன். மேலும் நான் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். இந்த இடத்தை விட்டு வெளியேறுவது எனபது ட்விட்டர் என்று அர்த்தமல்ல. நான் இந்த வேலையை இனி எப்போதும் செய்ய மாட்டேன், என்று கூறினார்.
மேலும்,வங்காளத்தில் மக்கள் மனநிலை மாறிவருவதை பற்றி விளக்கிய கிஷோர், பாஜகாவால் 60% வாக்குகளை பெறும் அளவுக்கு வாக்காளர்களை கவர்ந்திருக்கிறார்களா என்பதுதான் கேள்வி. பெரும்பான்மை வாக்குகளில் குறைந்தது 60% வாக்குகளைப் பெறாவிட்டால் அவர்களால் வங்காளத்தை வெல்ல முடியாது. இந்தியாவின் பிற பகுதிகளில் நாம் கண்டதைப்போலவே வங்காளமும் மாறியதாக நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil