Nirmala Sitharaman | Union Budget: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட்டை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டல் நிலையில், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை தொடர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருந்தது.
பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படுவதில்லை என்றாலும், முந்தைய மோடி அரசு, பியூஷ் கோயல் நிதி அமைச்சராக இருந்தபோது, இந்தப் போக்கைக் குறைத்து இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிட்டது. முதலாவதாக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) தொடங்கப்பட்டதாக அறிவித்தது, இது இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 பலன் அளிக்கும் என்று உறுதியளித்தது. இதேபோல், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தனின் (PM-SYM) கீழ் அமைப்புசாரா துறையில் 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ 3,000 வழங்கப்படும் என அன்றைய அரசாங்கம் அறிவித்தது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டாலும், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் திட்டம் என்பது ஒரு பங்களிப்புத் திட்டமாகும். இதில் தொழிலாளியும் அரசாங்கமும் சேமநல நிதியின் அடிப்படையில் சமமாக பங்களிப்பார்கள்.
முன்னாள் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஏனெனில் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள தனிநபர்கள் ரூ.12,500 முழு வரிச்சலுகையைப் பெறுவார்கள்.
2014 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ UPA) அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சமர்ப்பித்தார். பாதுகாப்புக்கான ஒதுக்கீடு முந்தைய ஆண்டை விட 10% உயர்த்தப்பட்டது மற்றும் ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்திற்கு கொள்கை ரீதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) நவீனமயமாக்கல் திட்டத்திற்காக ரூ.11,009 கோடி ஒதுக்கப்பட்டது.
சுவாரசியமாக, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி, 2014 இடைக்கால பட்ஜெட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜி.எஸ்.டி சட்டங்கள் மற்றும் 2014-2015 நேரடி வரி சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியிருந்தது. மேலும், மறைமுக வரி விகிதங்களில் சில சிறிய மாற்றங்களைச் செய்தது மற்றும் இரத்த வங்கிகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pre-poll interim budget: Modi govt sticks to tradition, no surprises like 2019
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“