பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 10 ஆம் தேதி முதல் முன் எச்சரிக்கை டோஸ் செலுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், அடுத்த டோஸ் போடும் பட்சத்தில், அது முதல் இரண்டு டோஸ்களில் இருந்து வேறுபட்ட தளத்தை அடிப்படையாக கொண்ட தடுப்பூசியாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பிரதமர் மோடி பூஸ்டர் என குறிப்பிடாமல் முன் எச்சரிக்கை டோஸ் என உரையில் குறிப்பிட்டுள்ளது, அடுத்த தடுப்பூசி மூன்றாவது டோஸாக இல்லாமல் புதிய தடுப்பூசியாக இருக்கும் என்பதை தெளிவுப்படுத்துகிறது.
முன் எச்சரிக்கை டோஸ் பெற தகுதியுடைய மக்கள்
சனிக்கிழமை நிலவரப்படி, 60 வயதுக்கு மேற்பட்ட 12.4 கோடி மக்கள் முதல் டோஸை பெற்றுள்ளனர். 9.21 கோடி முழுமையாக இரண்டு டோஸ் பெற்றுள்ளனர். அதே போல், 1.03 கோடி சுகாதாரத் துறை பணியாளர்கள் முதல் டோஸூம், 96 லட்சம் பேர் முழுமையாக 2 டோஸூம் செலுத்தியுள்ளனர். முன்களப் பணியாளர்களை பொறுத்தவரை, 1.83 பேர் முதல் டோஸ் மற்றும் 1.68 பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இந்தத் தரவுகளை பார்க்கையில், அடுத்த முன் எச்சரிக்கை டோஸை பெற 11 கோடி மக்கள் தகுதியுடைவர்கள் ஆவர்.
செயலிழந்த முழு வைரஸ் அல்லது அடினோவைரல் வெக்டர் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பயனாளிக்கு மூன்றாவது டோஸ் வேறு தளத்தின் அடிப்படையிலான தடுப்பூசியாக இருக்க வேண்டும். எனவே, அந்நபரால் கோவிஷீல்டு அலலது கோவாக்சினை செலுத்திகொள்ள முடியாது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Corbevax தடுப்பூசி
எனவே, முன் எச்சரிக்கை டோஸூக்கான சாத்தியக்கூறுகள் பல உள்ளன. ஹைதராபாத்தை தளமாக கொண்ட பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் Corbevax தடுப்பூசி, புரத துணை யூனிட் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது செயலிழந்த முழு-செல் தடுப்பூசிகளிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில், இது நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை மையத்தால் உருவாக்கப்பட்ட ஆன்டிஜென்னை பயன்படுத்துகிறது.
ஏற்கனவே, 30 கோடி டோஸ் Corbevax தடுப்பூசி பெற, மத்திய அரசு சார்பில் முன்பணமாக 1500 கோடி வழங்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசிக்கு அடுத்த இரண்டு வாரங்களில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
கோவோவாக்ஸ் தடுப்பூசி
இரண்டாவது ஆப்ஷன், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவோவாக்ஸ் தடுப்பூசி ஆகும். இது மறுசீரமைப்பு நானோ துகள்கள் புரத அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்ட்ராநேசல் தடுப்பூசி
மூன்றாவது ஆப்ஷன், மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் இன் இன்ட்ராநேசல் தடுப்பூசியாகும். பிரதமர் மோடி மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிட்டார். எனவே, இந்த தடுப்பு மருந்து முன் எச்சரிக்கை டோஸாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
mRNA கோவிட்-19 தடுப்பூசி
நான்காவது ஆப்ஷன், இந்தியாவின் முதல் mRNA கோவிட்-19 தடுப்பூசியாக இருக்கலாம், இது புனேவை தளமாகக் கொண்ட Gennova Biopharmaceuticals Ltd ஆல் உருவாக்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள பல நிபுணர் அமைப்புகள் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை பூஸ்டர் டோஸ்களாக பரிந்துரைத்துள்ளன. செப்டம்பரில், Covid-19 தடுப்பூசிகளின் பல்வேறு சேர்க்கைகளின் பூஸ்டர் தரவுகளை மதிப்பாய்வு செய்து, இங்கிலாந்தின் நிபுணர் அமைப்பு Pfizer இன் mRNA தடுப்பூசியை பூஸ்டராக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
பிரதமர் மோடியும் நேற்றைய உரையில் உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிட்டார். அந்த தடுப்பூசியை Zy-coV-D நிறுவனம் தயாரித்துள்ளது. இது முன் எச்சரிக்கை டோஸாக போடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil