பிரிமியம் மதுபானங்களின் விலை உயர்வால், பிற மாநிலங்களுக்குச் செல்பவர்கள், அங்குள்ள பிரீமியம் மதுபானங்களை வாங்கி கர்நாடகாவுக்கு கொண்டு செல்வதாக, தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, கர்நாடகாவில் பிரீமியம் மதுபானங்களின் விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க : Premium liquor prices to go down in Karnataka; beer, IML prices set to head north
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது பட்ஜெட் உரையில் பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்களின் (ஐஎம்எல்) விலையை உயர்த்த முன்மொழிந்துள்ளார். மேலும் "வரி அடுக்குகளை உயர்த்தவும், அண்டை மாநிலங்களுடன் போட்டி போடவும், ஐஎம்எல் மற்றும் பீர் வரி அடுக்குகள் திருத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பிரபலமான பிராண்டுகளுக்கான வரி அடுக்குகள் அதிகரிக்கும் அதே வேளையில், பிரீமியம் பிராண்டுகளின் விலைகள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் கூற்றுப்படி, முந்தைய நிதியாண்டில் கலால் துறையின் வருவாய் வசூல் இலக்கு ரூ.36,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் ரூ.38,525 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து பிராண்டுகளுக்கான வரி அடுக்குகள் மாற்றம் செய்யப்பட்டு விபரங்கள் விரைவில் வெளியாகும் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரிமியம் மதுபானங்களின் விலை உயர்வால், பிற மாநிலங்களுக்குச் செல்பவர்கள், அங்குள்ள பிரீமியம் மதுபானங்களை வாங்கி கர்நாடகாவுக்கு கொண்டு செல்வதாக, நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக ஹைதராபாத் போன்ற சந்தைகளில் ஒப்பிடும்போது, பிரீமியம் மதுபானங்களிலிருந்து கலால் வரியின் பங்களிப்பு இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை சுமார் 50 சதவீதத்துடன் குறைவாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”