ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத் உடலுக்கு, பாலம் விமான தளத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் அதிகாரப்பூர்வம் இல்லாத உயரதிகாரிகள் பட்டியலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெயர் இடம்பெற்றிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர், பாதுகாப்பு அமைச்சகம் அல்லது ராஷ்டிரபதி பவன் அளித்த தகவல் அடிப்படையில் இந்த லிஸ்ட் தயார் செய்யவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.
நெறிமுறையின்படி, எந்தவொரு ராணுவ வீரரின் உடல் மீதும் குடியரசு தலைவர் மாலை அணிவிப்பதில்லை. அவரது சார்பாக பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் அதைச் செய்கிறார்கள். மூப்படைகளின் தளபதியாக இருந்தாலும், குடியரசு தலைவர் அஞ்சலி செலுத்துவதில் சிப்பாய், ஜெனரல் என வேறுபடுத்த முடியாது.விபத்து குறித்து செய்தி அறிந்ததும், ராம்நாத் கோவிந்த் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.
கண்களை குணமாக்கிய யாகம்
வெள்ளிக்கிழமை மாசுபாடு குறித்த மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்ற பாஜக எம்பி ராம் சந்தர் ஜங்ரா,கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஜனதா ஊரடங்கு உத்தரவின் போது தனது குடும்பத்தினர் 14 மணி நேர யாகம் நடத்தியதை விவரித்தார்.
ஒருவித கண் அலர்ஜியால் அவதிப்பட்ட தனது மனைவி, புகை அதிகமாக இருக்கும் பகுதிகளில் இருந்து தள்ளஇருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், ஆச்சரியப்படும் வகையில் யாகம் அவரது கண்களைக் குணப்படுத்தியது என தெரிவித்தார்.
2021 தேர்தலில் பறிமுதல் பணம் அதிகம்
தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஐஆர்எஸ் பயிற்சியாளர்களின் 74வது குழுவுடன் நடத்திய உரையாடலின் போது, 2021 இல் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, தீவிர கண்காணிப்பு சோதனை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட தொகை குறித்து விவரித்தார். இது, 2016இல் பறிமுதல் செய்யப்பட்ட தொகையை விட 4.5 மடங்கு அதிகமாகும்.
வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், அரசியல் கட்சிகளின் பங்களிப்பு, ஆண்டு அறிக்கைகளை ஆய்வு செய்தல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக செப்டம்பர் மாதம் CBDT என்கிற தனி தேர்தல் பிரிவு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil