இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “கொள்கைகளை எதிர்ப்பதும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். நாடாளுமன்றம் சுமூகமாக நடக்கும் போது, ஆரோக்கியமான விவாதம் நடக்கும், அப்போது மக்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள்.” என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Parliament Session Live Updates:
‘வினாத்தாள் கசிவு’ விவகாரம் குறித்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசினார், இந்தகுற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அவர் அவையில் உரையாற்றும்போது உறுப்பினர்கள் “நீட்... நீட்” என கோஷமிட்டனர். தீர்வு ஒன்றை எட்டுவதற்கு பாகுபாடான அரசியலுக்கு அப்பாற்பட்டு எழ வேண்டிய தேவை இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தேர்வுகளின்போது பயன்படுத்தப்படும் நியாயமற்ற வழிமுறைகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்டத்தை உருவாக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார்.
வடகிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார். “கடந்த 10 ஆண்டுகளில், பல பழைய மோதல்கள் தீர்க்கப்பட்டுள்ளன, பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி (ஏ.ஏ.பி) முடிவு செய்தது.
“நேற்று அவர்கள் கெஜ்ரிவாலை கைது செய்த விதம்... நாங்கள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிப்போம், ஆனால், எதிர்ப்பு தெரிவிப்போம்... குடியரசுத் தலைவர் மற்றும் அரசியலமைப்பு அனைத்தையும் உள்ளடக்கியது, ஆனால், அரசியலமைப்பு துண்டு துண்டாக உடைத்து வீசப்படும் போது, சர்வாதிகாரம் நடைபெறுகிறது. நீதி, ஒருவரின் குரலை உயர்த்துவது ஒரு பொறுப்பாகும்” என்று ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி சந்தீப் பதக் செய்தியாளர்களிடம் கூறினார்.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 21ம் தேதி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை நீதிமன்றம் சி.பி.ஐ கெஜ்ரிவாலை 3 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்ததைக் கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி.க்கள் வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங் தலைமையில், உறுப்பினர்கள், “சர்வாதிகாரத்தை பொறுத்துக்கொள்ள முடியாது, கெஜ்ரிவாலை விடுதலை செய், பிரதமர் பதில் சொல்ல வேண்டும்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
சமாஜ்வாடி கட்சியின் மக்களவை எம்.பி ஆர்.கே. சௌத்ரி புதன்கிழமை கூறுகையில், “முந்தைய ஆட்சியில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் 'செங்கோல்' நிறுவியது. 'செங்கோல்' என்றால் 'ராஜ்-தண்ட்'. இதற்கு 'ராஜா கா தண்டா' (அரசனின் தடி) என்றும் பொருள்”
“இப்போது, நாடு சுதந்திரமாக உள்ளது. நாடு அரசனின் தடியால் நடத்தப்படுமா அல்லது அரசியலமைப்பால் நடத்தப்படுமா? அரசியலமைப்பைக் காப்பாற்ற நாடாளுமன்றத்திலிருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று நான் கோருகிறேன்” என்று சவுத்ரி கூறினார். மேலும், அவர் அம்பேத்கரைப் பின்பற்றுபவர் என்றும் கூறினார்.
இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடி அரசாங்கத்தை பாராட்டினார். மக்கள் மூன்றாவது முறையாக அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறினார். 18வது மக்களவையில் அவர் ஆற்றிய முதல் உரை இது.
மேலும், லோக்சபா தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் கமிஷனின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
18வது லோக்சபா அமுத காலத்தின் ஆரம்ப கட்டத்தில் உருவாக்கப்பட்டது என்றும், இது அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று 56-வது ஆண்டைக் காணும் என்றும் கூறிய குடியரசுத் தலைவர் முர்மு, இந்த அரசாங்கத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.
“வரும் அமர்வுகளில், இந்த அரசாங்கம் இந்த காலத்திற்கான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால நோக்கத்தின் பயனுள்ள ஆவணமாக இருக்கும். பெரிய பொருளாதார மற்றும் சமூக முடிவுகளுடன், பல வரலாற்று நடவடிக்கைகளும் இருக்கும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் பார்க்கலாம்” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
“‘விஷ்வ பந்து’ என்ற முறையில், பல உலகளாவிய பிரச்னைகளை தீர்க்க இந்தியா முன்முயற்சி எடுத்துள்ளது” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் கூறினார்.
“இன்று, இந்தியா உலகின் சவால்களை அதிகரிப்பதற்காக அறியப்படவில்லை, ஆனால் தீர்வுகளை வழங்குவதற்காக அறியப்படுகிறது” என்று திரௌபதி முர்மு கூறினார். “ஊட்டச்சத்து முதல் நிலையான விவசாயம் வரை, இந்தியா பல தீர்வுகளை முன்வைத்துள்ளது” என்றார்.
இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வடகிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகக் கூறினார். “கடந்த 10 ஆண்டுகளில், பல பழைய மோதல்கள் தீர்க்கப்பட்டுள்ளன, பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சியின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக ஏ.எஃப்.எஸ்.பி.ஏ-வை ரத்து செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது” என்று திரௌபதி முர்மு கூறினார்.
“வடகிழக்கில் அனைத்து வகையான இணைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு போன்ற ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று திரௌபதி முர்மு கூறினார்.
அசாமில் 27,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் செமிகண்டக்டர் ஆலையை திரௌபதி முர்மு மேற்கோள் காட்டினார். “இதன் பொருள் வடகிழக்கு 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' சிப்களுக்கான மையமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
“வலிமையான இந்தியாவிற்கு, பாதுகாப்புப் படைகளில் நவீனத்துவம் தேவை. மோதல்களின் போது நாடு சிறப்பாக இருப்பதை உறுதிசெய்ய ஆயுதப் படைகளில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் தேவை. ஆயுதப்படைகளை தன்னிறைவு பெற எனது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
திரௌபதி முர்மு கூறிய கருத்துக்களால், அவையில் ‘அக்னிவீர்’ என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.
“ஜூலை 1 முதல், பாரதிய நியாய சம்ஹிதா நாட்டில் நடைமுறைக்கு வரும். இப்போது, தண்டனையை விட நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்... இது அரசியலமைப்புச் சட்டத்திலும் உள்ளது. புதிய சட்டங்கள் மூலம், நீதித்துறை செயல்பாட்டில் செயல்திறன் இருக்கும்” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
“சி.ஏ.ஏ மூலம், அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு குடியுரிமை வழங்கத் தொடங்கியுள்ளது. இது பலரை கண்ணியமான வாழ்க்கை வாழ அனுமதித்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்துப் பேசினார், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அவர் அவையில் உரையாற்றும்போது உறுப்பினர்கள் “நீட்... நீட்” என கோஷமிட்டனர். தீர்வு ஒன்றை எட்டுவதற்கு பாகுபாடான அரசியலுக்கு அப்பாற்பட்டு எழ வேண்டிய தேவை இருப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி மேலும் தெரிவித்தார். தேர்வுகளின்போது பயன்படுத்தப்படும் நியாயமற்ற வழிமுறைகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்டத்தை உருவாக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார்.
“கொள்கைகளை எதிர்ப்பதும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். நாடாளுமன்றம் சுமூகமாக நடக்கும் போது, ஆரோக்கியமான விவாதம் நடக்கும், அப்போது மக்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள்.” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
“வளர்ந்த இந்தியாவை (விக்சித் பாரத்) கட்டியெழுப்புவது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அபிலாஷை மற்றும் தீர்மானம் என்பதை நாம் அனைவரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த தீர்மானத்தை அடைவதில் எந்த தடைகளும் உருவாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
1975-ல் விதிக்கப்பட்ட அவசரநிலையைப் பற்றி பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “அவசரநிலையின் போது நாடு குழப்பத்தில் மூழ்கியது, ஆனால், அத்தகைய அரசியலமைப்பிற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக தேசம் வெற்றி பெற்றது” என்று கூறினார்.
“இந்திய மக்கள் எப்போதும் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கையையும், தேர்தல் நிறுவனங்களில் முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர். நமது வலுவான ஜனநாயகத்தை நிலைநிறுத்த இந்த நம்பிக்கையை நாம் காப்பாற்றி பாதுகாக்க வேண்டும். ஜனநாயக அமைப்புகள் மற்றும் தேர்தல்கள் மீதான மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதை நாம் உணர வேண்டும். இந்த செயல்முறை நாம் அனைவரும் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டுவது போன்றது” என்று திரௌபதி முர்மு கூறினார்.
“நமது ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் கூட்டாக கண்டிக்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
“வாக்கு சீட்டுகள் பறிக்கப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அந்த காலங்களை நாம் அனைவரும் நினைவில் வைத்திருக்கிறோம். தேர்தல் செயல்முறையின் புனிதத்தை உறுதிப்படுத்த, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது” என்று திரௌபதி முர்மு கூறினார்.
“கடந்த சில பத்தாண்டுகளில் உச்ச நீதிமன்றம் முதல் மக்கள் நீதிமன்றம் வரை இ.வி.எம் ஒவ்வொரு சோதனையிலும் தேர்ச்சி பெற்றுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
“தகவல் தொடர்பு புரட்சியின் இந்த காலகட்டத்தில், ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தவும் சீர்குலைக்கும் சக்திகள் சதி செய்கின்றன. இந்த சக்திகள் நாட்டிற்குள் உள்ளன, நாட்டிற்கு வெளியேயும் செயல்படுகின்றன. இந்த சக்திகள் வதந்திகளை பரப்புகின்றன, மக்களை தவறாக வழிநடத்துகின்றன” குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
“இந்த நிலைமையை தடையின்றி தொடர அனுமதிக்க முடியாது. இன்று, தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், மனிதகுலத்திற்கு எதிரான அதன் தவறான பயன்பாடு மிகவும் தீங்கு விளைவிக்கும்” என்று திரௌபதி முர்மு கூறினார்.
“நமக்கு என்ன நடக்கிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சிறையில் அடைத்தது எப்படி, நேற்று அவர் சி.பி.ஐ-யால் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அரசாங்கத்தின் அறிக்கையை அவர் படிக்கிறார், அதனால் குடியரசுத் தலைவரின் உரையை நாங்கள் புறக்கணிப்போம்” என்று ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்ஜய் சிங் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.