Advertisment

ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவி பிரமாணம்: முதல் உரை ஹைலைட்ஸ்

இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவு காண்பது மட்டுமல்லாமல், அந்த கனவுகளை நிறைவேற்றவும் முடியும் என்பதற்கு எனது தேர்தல் ஒரு சான்று- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
President Droupadi Murmu first speech

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய திரௌபதி முர்மு, தனது சாதனை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் சொந்தமானது என்றும், கோடிக்கணக்கான பெண்களின் திறன்களின் பிரதிபலிப்பு என்றும் கூறினார்.

Advertisment

முதல் பழங்குடி பெண் மற்றும் இளைய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்ற முர்முவுக்கு, இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா திங்கள்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முர்மு உரையின் முக்கிய அம்சங்கள் இங்கே:

நாடு சுதந்திரம் அடைந்து 50வது ஆண்டை கொண்டாடும் போது எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது ஒரு தற்செயல் நிகழ்வு. இன்று, சுதந்திரத்தின் 75வது ஆண்டில், இந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வையை அடைய இந்தியா தயாராகி வரும் வரலாற்றுச் சமயத்தில், இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.

இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு என்னை தேர்ந்தெடுத்த, அனைத்து எம்.பி.க்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாக்கு, நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு.

சுதந்திர இந்தியாவில் பிறந்த, நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் நான். சுதந்திர இந்தியாவின் குடிமக்களிடம், நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நமது முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்.

ஜனாதிபதி பதவியை எட்டியது எனது தனிப்பட்ட சாதனை அல்ல, இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை. இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவு காண்பது மட்டுமல்லாமல், அந்த கனவுகளை நிறைவேற்றவும் முடியும் என்பதற்கு எனது தேர்தல் ஒரு சான்று.

ஒரு ஏழை வீட்டில் பிறந்த மகள், தொலைதூர பழங்குடி பகுதியில் பிறந்த மகள், இந்தியாவின் மிக உயரிய அரசியலமைப்பு பதவியை அடைய முடியும் என்பது நமது ஜனநாயகத்தின் சக்தி.

பல ஆண்டுகளாக வளர்ச்சி இல்லாமல் இருந்த ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் - என் மூலம் பிரதிநிதித்துவம் பெறுவது எனக்கு திருப்தி அளிக்கிறது. எனது தேர்தல்’ நாட்டின் ஏழைகளின் ஆசீர்வாதத்தைக் கொண்டுள்ளது மற்றும் நாட்டின் கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் மகள்களின் கனவுகளையும், திறன்களையும் பிரதிபலிக்கிறது.

குடியரசுத் தலைவராக எனது பணியில், ​​அவர்களின் நலன்கள் எனக்கு முதன்மையாக இருக்கும் என்று அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக இந்திய இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் உறுதியளிக்கிறேன்.

75 ஆண்டுகளில் பாராளுமன்ற ஜனநாயகம், பங்கேற்பு மற்றும் ஒருமித்த கருத்து மூலம் முன்னேற்றம் என்ற உறுதியை இந்தியா முன்னெடுத்துச் சென்றுள்ளது.

— with inputs from PTI

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India President Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment