குடியரசுத் தலைவர் சென்ற ஹெலிகாப்டர் ஹெலிபேடில் சிக்கியதால் பரபரப்பு; தீயணைப்பு வீரர்கள் தள்ளி மீட்பு

கேரளா சென்ற குடியரசுத் தலைவர் சென்ற ஹெலிகாப்டர் ஹெலிபேடில் சிக்கியதால் பரபரப்பு; ஹெலிகாப்டரை சிறிது தூரம் தள்ளி குடியரசு தலைவர் உள்ளிட்ட குடும்படுத்தினரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கேரளா சென்ற குடியரசுத் தலைவர் சென்ற ஹெலிகாப்டர் ஹெலிபேடில் சிக்கியதால் பரபரப்பு; ஹெலிகாப்டரை சிறிது தூரம் தள்ளி குடியரசு தலைவர் உள்ளிட்ட குடும்படுத்தினரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

author-image
WebDesk
New Update
president sabarimala helicopter

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டார். இன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள தற்காலிக ஹெலிபேட்டில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இந்த பயணம், சபரிமலை பரவளப்புரியின் போது குடியரசு தலைவர் முர்முவின் முதல் பொது தரிசனமாக அமைந்தது. கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை, அவரது பாதுகாப்புக்காக முழு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

Advertisment

ஆனால், ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட திடீர் சம்பவம், அங்கு இருந்த அனைவரையும் பரபரப்படையச் செய்தது. ஹெலிகாப்டர் தரையிறங்கிய தற்காலிக ஹெலிபேட், கான்கிரீட் கலவை பயன்படுத்தி அவசரமாக அமைக்கப்பட்டது. தரையிறங்கும்போது, ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், ஹெலிகாப்டர் முழுவதும் சற்று சாய்ந்து, குடியரசுத் தலைவர் முர்மு உள்ளிட்ட அவரது உறவினர்கள் பாதுகாப்பாக தரை இறங்க முடியாமல் தவித்தனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு இருந்த காவல்துறை மற்றும் கோவில் ஊழியர்கள் உடனடியாக மீட்க செயல்பட்டனர், ஆனால் சிக்கல் சரியாகவில்லை. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். பத்தனம் திட்டாவிலிருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், ஹெலிகாப்டரை சிறிது தூரம் தள்ளி, சக்கரத்தை விடுவித்தனர். இதனால் கிட்டத்தட்ட சுமார் 10 நிமிடங்கள் ஹெலிகாப்டரை தள்ளும் நிலை நீடித்தது. இதனைத்தொடர்ந்து குடியரசு தலைவர் முர்மு மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக இறங்கினர்.

சபரிமலை தரிசனத்திற்காக வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் தரையிறங்கிய பத்தனம்திட்டா பிரமாடம் மைதானத்தின் கான்கிரீட் ஹெலிபேட் காய்வதற்குள் ஹெலிகாப்டர் இறங்கியதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

தீயணைப்பு வீரர்களின் விரைந்த செயலால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமான நிலையம் மற்றும் கோவில் நிர்வாகம், ஹெலிபேட்டின் தரைத் தளத்தை சரிபார்த்து, பின்னர் குடியரசுத் தலைவரின் சபரிமலை தரிசனத்தை அனுமதித்தது. 

மேலும், சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை, ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருந்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

Droupadi Murmu Sabarimala Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: