Advertisment

இந்தியாவில், “அச்சமில்லா, தீர்க்கமான ஆட்சி”.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, “நேர்மைக்கு மதிப்பு அளிக்கிறது. அச்சமற்றது, தீர்க்கமானது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
President Droupadi Murmu to Parliament India now has govt that is fearless and decisive

நாடாளுமன்றத்தில் முதல் உரையை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்ஜெட் கூட்டத் தொடரில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, “நேர்மைக்கு மதிப்பு அளிக்கிறது. அச்சமற்றது, தீர்க்கமானது” எனத் தெரிவித்தார்.

Advertisment

மேலும், “ஏழைகள் மற்றும் பட்டியலின மக்கள் மற்றும் பெண்கள் மீது கவனம் செலுத்தும் வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
நாடு தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் நவீன கருத்துக்களை இழக்காமல் நாடு முன்னேறுகிறது.

நாம் 2047ஆம் ஆண்டுக்குள் கடந்த கால பெருமையுடன் இணைக்கப்பட்ட நவீன பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
‘ஆத்ம நிர்பார்’ திட்டங்களை நிறைவேற்றும் திறன் கொண்ட ஒரு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.

அது வறுமை இல்லாத இந்தியாவாக, நடுத்தர வர்க்கமும் செழிப்பாக இருக்கும் இந்தியாவாக, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் வழி காட்ட இளைஞர்களும் பெண்களும் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக, இளைஞர்கள் இரண்டு படிகள் மேலே நிற்கும் இந்தியாவாக இருத்தல் வேண்டும்” என்றார்.

மேலும், ஜனாதிபதி தனது உரையை நிறைவு செய்யும் போது, கடினமான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய உழைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார்.
அப்போது, “நமது ஜனநாயகத்தின் இதயமான இந்த நாடாளுமன்றத்தில், கடினமானதாகத் தோன்றும் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதே நமது முயற்சியாக இருக்க வேண்டும்.

நாளை செய்ய வேண்டியதை இன்றே நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். மற்றவர்கள் இன்னும் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை இந்தியர்களாகிய நாம் அவர்களுக்கு முன் சாதிக்க வேண்டும்” என்றார்.

பாஜக தலைமையிலான அரசின் சாதனைகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான நலன்புரி முயற்சிகள் குறித்து உரையாற்றிய குடியரசுத் தலைவர், உலகமே தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இந்தியாவின் தன்னம்பிக்கை உச்சத்தில் உள்ளது என்றார்.
மேலும், இந்தியா, ஜி-20 தலைவர் பதவியை வகிக்கும் போது, உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜி-20 உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, “இன்று, இந்தியாவின் தன்னம்பிக்கை மிக உயர்ந்த நிலையில் உள்ளது, உலகம் அவளை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இந்தியா உலகிற்கு தீர்வுகளை வழங்கி வருகிறது” என்றார்.
தொடர்ந்து இரண்டு முறை நிலையான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக வாக்காளர்களைப் பாராட்டிய குடியரசுத் தலைவர், பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா, ஹர் ஹர் ஜல் மற்றும் பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி போன்ற திட்டங்களைப் பட்டியலிட்டார்.

மேலும், பழங்குடியின சமூகத்திற்கு மரியாதை மற்றும் ஆதரவை வழங்கும் நடவடிக்கைகளையும் அவர் குறிப்பிட்டார்,

தொடர்ந்து, “தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக” மத்திய அரசின் முன்முயற்சிகளைப் பட்டியலிட்ட குடியரசுத் தலைவர், அது யாருக்கும் பாரபட்சம் காட்டவில்லை என்றும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பாடுபட்டதாகவும் கூறினார். முர்முவின் பேச்சு, பெண்களுக்கான அரசாங்கத்தின் நலன்சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தியது.

பின்னர் பயங்கரவாதம் குறித்து அவர் பேசுகையில், “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்துள்ள கடுமையான நிலைப்பாட்டை உலகம் புரிந்து கொண்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் இந்தியா இன்று உலக நாடுகளால் தீவிரமாகக் கேட்கப்படுவதற்கு இதுவே காரணம்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

India President Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment