President Droupadi Murmu to arrive in Puducherry on June 6 Tamil News: புதுச்சேரி: கடந்த மார்ச் மாதம் புதுவை சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்க சாமி வெளியிட்டார். அதில், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, பிரதிமாதம் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், புதுவையில் சித்த மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டிருந்தார்.
Advertisment
இந்நிலையில், இந்த திட்டங்களைத் தொடங்கி வைக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அடுத்தமாதம் 6ம் தேதி புதுவைக்கு வர உள்ளார். 2 நாட்கள் புதுவையில் தங்கியிருக்கும் அவர், இந்த திட்டங்களை எல்லாம் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, புதிய சட்டசபை கட்டுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக முடிந்தபிறகு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும என்றார்.
தமிழக எம்பிக்களுக்கு புதுவையில் வேலை இல்லை என்று கவர்னர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளாரே..? என்ற கேள்விக்கு தமிழகத்துடன் நல்ல நட்புறவு உள்ளது. தமிழகத்துடன் ஒத்து இருப்போம். இது தொடரும். புதுவை மாநிலம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால், பழைய நட்புறவு தொடரும் என்று ரங்கசாமி பதில அளித்தார்.