Advertisment

ஜி20 அழைப்பிதழில், “பாரத குடியரசுத் தலைவர்” என அச்சடிப்பு: அடுத்த திட்டம் என்ன?

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து தொடர்பான அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
G20 dinner invite

ஜி20 மாநாட்டு விருந்துக்கு அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழ்

புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டின் போது உலகத் தலைவர்களுக்கு செப்டம்பர் 9ஆம் தேதி பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கும் விருந்துக்கான அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் என்ற பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இதனை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உறுதிப்படுத்தியது.

Advertisment

முழு G20 பயிற்சி மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் வெளியுறவு அமைச்சகத்தால் வழிநடத்தப்படுவதால், இந்த நடவடிக்கை அதற்கு இணக்கமாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.

ஜனாதிபதி அழைப்பை மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்த நிலையில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தியாவை "பாரத குடியரசு" என அழைத்துள்ளார்.

இது குறித்து ரமேஷ் ட்விட்டரில், “இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக உள்ளது. ஆனால இது தற்போது தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறது” என்றார்.

ஆனால் சர்மா பாரத் பெயர் மாற்றத்தை வரவேற்றுள்ளார். அதில், “பாரத குடியரசு பெருமையும் பண்பாட்டையும் குறிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், செப்டம்பர் 18-22 தேதிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை அடுத்து, அரசியலமைப்பில் இருந்து ‘இந்தியா’ என்ற வார்த்தையை நீக்குவதற்கான திட்டம் தயாராகி வருவதாக பரவலாக ஊகிக்கப்படுகிறது.

இந்தியா அதுவே பாரதம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பாரத் என்ற ஒற்றை வார்த்தை மட்டும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

‘President of Bharat’: Invite for G20 dinner sparks row

இரண்டு நாட்களுக்கு முன்பு, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், கவுகாத்தியில் சகால் ஜெயின் சமாஜ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘இந்தியாவை’ ‘பாரத்’ என்று அழைத்தார். பழங்காலத்திலிருந்தே பாரதம் என்ற பெயர் தொடர்கிறது என்றும் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பகவத் கூறியிருந்தார்.

G20 தலைவர்கள் உச்சி மாநாடு 2023 செப்டம்பர் 9-10 வரை பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, நாட்டின் கௌரவம் மற்றும் பெருமை தொடர்பான ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

பாரத் ஜோடோ என்ற பெயரில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கத்தை ஏன் வெறுக்கிறார்கள்? காங்கிரசுக்கு நாடு, அரசியல் சாசனம் அல்லது அரசியலமைப்பு அமைப்புகள் மீது எந்த மரியாதையும் இல்லை” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Congress Jp Nadda Vice President Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment