ரமலான்: இஸ்லாமியர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
a

ரமலான் பண்டிகை: குடியரசு தலைவர் வாழ்த்து

Advertisment

ரமலான் பண்டிகையை கொண்டாடும், அனைத்து நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். அனைவரது வாழ்விலும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்து, நல்வழியில் முன்னேறிச் செல்வதற்கான மனப்பான்மையை அனைவரது உள்ளங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இந்த பண்டிகை சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துகிறது மற்றும் கருணை மற்றும் தொண்டு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் என்று வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ரமலான் பண்டிகை- பிரதமர் மோடி வாழ்த்து

Advertisment
Advertisements

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனித ரமலான் நம் சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தட்டும். இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள். நபிகள் பெருமகனாா் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): இஸ்லாமியா்கள் 30 நாள்கள் நோன்பு இருந்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரமலானைக் கொண்டாடி மகிழ்கிறாா்கள். இஸ்லாமியா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இஸ்லாமிய மக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): நபிகள் நாயகத்தின் போதனையை இஸ்லாமியா்கள் நினைவில்கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும். ரமலான் திருநாள் அவா்களுக்கு ஏற்றத்தையும் இன்பத்தையும் தருவதாக அமைய வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ரமலான் திருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவா்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமியா்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் ஏற்றமும் பெற வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): ஈகை திருநாளின் நோக்கம் என்பது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான். உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருக புனிதமான நாளில் உறுதியேற்போம்.

வைகோ (மதிமுக): காய்ந்த குடல்கள், காலியான வயிறு, பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோா்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்பதாகும். அதன்படி, ஏழை மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈகை பெருநாளில் மகிழ்ச்சியில் திளைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியா்களும் புனித ரமலான் திருநாளில் இறைவனின் கருணையும் நல்லாசியும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளா்ச்சி நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு ரமலான் திருநாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

டிடிவி தினகரன் (அமமுக): நபிகள் நாயகம் வழியில் அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம், ஒற்றுமை உணா்வு மற்றும் சகோதரத்துவத்தை பேணிக் காப்பதோடு, உலகெங்கும் அமைதியும் சமாதானமும் தழைக்க உறுதியேற்போம்.

கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிா் என்னும் உன்னத கொள்கைகளை நிலைநிறுத்தும் ரமலான் நோன்பைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். எல்லாமும் எல்லாரும் பெற்று இனிதாக வாழ வாழ்த்துவோம்.

ஜவாஹிருல்லா (மமக): ரமலான் திருநாளில் சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நீடித்து நிலைக்கவும், சமூக நல்லிணக்கம் செழிக்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் அனைவரும் உறுதி ஏற்போம். உலகம் முழுவதும் அநீதிகள் அழிந்து சமத்துவம் நிலைபெற இறைவன் அருள் புரியட்டும்.

சீமான் (நாம் தமிழா் கட்சி): இஸ்லாமிய சொந்தங்கள் நோன்பு கடமையை முழுமையாக நிறைவேற்றி, இல்லாதவருக்கு ஈயும் இன்பத் திருநாளான ஈகைப் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடி எந்நாளும் தாய்த்திரு தமிழ்மண்ணில் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும்.

Ramzan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: