அனைத்து குடிமக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது பதவிக் காலத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமிருந்தும் முழு ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் வாழ்த்துகளைப் பெற்றதாகக் கூறினார்.
21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கு இந்தியா தயாராகி வருகிறது என்று உறுதியாக நம்புவதாக பதவிக் காலம் முடிவடைந்து செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியாவின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு வணக்கம் செலுத்தினார். மேலும், ஒருவரின் வேர்களுடன் இணைந்திருப்பது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு என்று கூறினார்.
கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌங்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த ராம்நாத் கோவிந்த், இன்று நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
அனைத்து குடிமக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது பதவிக் காலத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமிருந்தும் முழு ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் வாழ்த்துகளைப் பெற்றதாகக் கூறினார்.
கான்பூரில் உள்ள தனது பள்ளியில் தனது ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெறுவதற்காக ஜனாதிபதியாக இருந்த போது தனது சொந்த கிராமத்திற்குச் சென்றதை நினைவு கூர்ந்த ராம்நாத் கோவிந்த அது தனது வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று எனக் கூறினார். “நம்முடைய வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு. இளைய தலைமுறையினர் தங்கள் கிராமம் அல்லது நகரம் மற்றும் அவர்களின் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியா உருவாக்கிய பெரிய சிந்தனையாலர்களின் பங்களிப்புகளைக் குறிப்பிட்டு மேலும் கூறினார்: “திலகர் மற்றும் கோகலே முதல் பகத்சிங் மற்றும் நேதாஜி வரை, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் மற்றும் ஷியாம பிரசாத் முகர்ஜி முதல் சரோஜினி நாயுடு மற்றும் கமலாதேவி சட்டோபாத்யாய் வரை – இவர்களைப் போல எங்கும் இல்லை. மனிதகுல வரலாற்றில் பல சிறந்த மனிதர்கள் ஒரு பொதுவான காரணத்திற்காக ஒன்றிணைந்தார்கள். “பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாடு முழுவதும் பல எழுச்சிகள் நடந்தன. ஒரு புதிய விடியலைப் பற்றிய நம்பிக்கைகளைத் தந்த பல மாவீரர்களின் பெயர்கள் நீண்ட காலமாக மறந்துவிட்டன. அவர்களில் சிலரின் பங்களிப்புகள் சமீப காலங்களில் மட்டுமே பாராட்டப்படுகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து வெள்ளிக்கிழமை இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு, திங்கள்கிழமை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பதவியேற்கிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமையன்று தனது பிரியாவிடை உரையில், கோவிந்த் போராட்டங்கள் எப்போதும் காந்திய வடிவில் நடத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் பாகுபாடான அரசியலுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “குடிமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்புகள் உட்பட பல அரசியலமைப்பு வழிகள் திறக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தேசத்தின் தந்தை அந்த நோக்கத்திற்காக சத்தியாகிரகம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் மறுபக்கத்தைப் பற்றி சமமாக கவலைப்பட்டார். குடிமக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் கோரிக்கைகளை வலியுறுத்தவும் உரிமை உள்ளது. ஆனால், அது எப்போதும் அமைதியான காந்திய வடிவில் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”