மாதத்திற்கு ரூ. 2.75 லட்சம் வரி செலுத்துகிறேன் - குடியரசு தலைவர்
நாட்டிலேயே மிகவும் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசாங்க ஊழியர் என்றாலும் நானும் மாதத்திற்கு ரூ. 2.75 லட்சம் வரி செலுத்துகிறேன் - என சிறப்பு ரயில் பயணித்து போது பேச்சு
President Ram Nath Kovind : டெல்லியில் சிறப்பு ரயில் பயணம் மேற்கொள்வதற்காக சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 25ம் தேதி அன்று புறப்பட்டார் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்.
Advertisment
கான்பூர் சென்று கொண்டிருந்த அவர், தன்னுடைய பள்ளியில் உடன் படித்த நெருக்கமான நபர்களை சந்தித்து உரையாடினார். ஜிஞாக் மற்றும் ருரா நிறுத்தங்களுக்கு இடையே இந்த உரையாடல் நடைபெற்றது.
அந்த உரையாடலின் போது, “நாட்டிலேயே மிகவும் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசாங்க ஊழியர் என்றாலும் நானும் மாதத்திற்கு ரூ. 2.75 லட்சம் வரி செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் அனைவரும் என்னுடைய சம்பளம் ரூ. 5 லட்சம் என்பதை மட்டுமே பார்க்கின்றார்கள். ஆனால் என்னுடைய வரி குறித்து தெரிவதில்லை என்று கூறியதாக உள்ளூர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில் பயணத்தின் போது அவர் தன்னுடைய பள்ளியில் படித்தவர்கள் மட்டும் இல்லாமல் சமூக சேவையில் ஈடுபட்டிருந்த ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த நபர்களையும் பார்த்து உரையாடினார் ராம் நாத் கோவிந்த்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil