Advertisment

மோடியை வரவேற்க ஹெலிபேடிற்கு சென்ற குடியரசுத் தலைவர் - என்ன காரணம்?

கிராமத்தின் விருந்தினர் என்பதால் தான் தனிப்பட்ட முறையில் ஹெலிபேடுக்கு வந்ததாக குடியரசு தலைவர் என்னிடம் கூறியதாக, மோடி உரையின் போது தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
மோடியை வரவேற்க ஹெலிபேடிற்கு சென்ற குடியரசுத் தலைவர் - என்ன காரணம்?

குடியரசு தலைவரின் மூதாதையர் ஊரான கான்பூரில் உள்ள பாரவுங்க் கிராமத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை, குடியரசு தலைவருக்கான நெறிமுறையை மீறி, ஹெலிபேட் தளத்தில் மோடியை வரவேற்க ராம்நாத் கோவிந்த் சென்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய மோடி, தனது கிராமத்தின் விருந்தினர் என்பதால் தனிப்பட்ட முறையில் ஹெலிபேடுக்கு வந்ததாக குடியரசு தலைவர் என்னிடம் கூறினார். அவரது இந்த செயல், சங்கத்தை ஏற்படுத்தியது என்றார்.

குடியரசு தலைவர் "சம்விதன்" (அரசியலமைப்பு), "சன்ஸ்கார்" (கலாச்சார மதிப்பு) இரண்டையும் உள்ளடக்கியவர் ஆவர்.

தொடர்ந்து பேசிய மோடி, விருந்தினர் கடவுளுக்கு சமமானவர் என்கிற கலாச்சார மதிப்பு என்றென்றும் நமது நரம்புகளில் இருப்பதை இச்சம்பவம் காட்டுகிறது. இதற்கு குடியரசு தலைவர் சிறந்த உதாரணம் என்றார்.

உரையின் போது, ஹெலிபேட் வரவேற்புக்கு மோடி கைகளை கூப்பி நன்றி கூறினார். உடனடியாக, கோவிந்த்தும் கூப்பிய கைகளுடன் இருக்கையை விட்டு ஏழுந்தார்.

மோடி கூறுகையில், இன்று இந்த கிராமத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்காக உருவாக்கப்பட்ட நெறிமுறைகளை மீறி, என்னை ஆச்சரியப்படுத்தினார்.அவருடைய வழிகாட்டுதலின் கீழ் நாங்கள் பணிபுரிவதால் சங்கடமாக உணர்ந்தேன். அவரது பதவிக்கு தனி மரியாதை உள்ளது என்றார்.

இதுகுறித்து பேசிய ராம்நாத் கோவிந்த், நான் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால், கலாச்சார மதிப்புகளுக்கு முக்கியத்தவம் அளிப்பேன். இன்று, நீங்கள் ஏன் கிராமத்திற்கு வந்திருக்கிறீர்கள். ஒரு விருந்தினரை வரவேற்க தான் இங்கு வந்தேன். குடியரசுத் தலைவராக வரவில்லை.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற ஒருவருக்கு உயரிய பொறுப்பை வழங்க மோடி முன்முயற்சி எடுத்தபோது வியப்படைந்தேன். உத்தரப் பிரதேசம், நாட்டிற்கு ஒன்பது பிரதமர்களை வழங்கியுள்ளது ஆனால் ஒருபோதும் குடியரசு தலைவரை வழங்கவில்லேயை ஒன்ற நினைப்பு இருந்து வந்தது. இந்திய தாய்க்கு சேவை செய்திட புதிய அர்த்தம் கொடுத்ததற்காக பிரதமரை பாராட்டினார்.

பத்தர் தேவி கோயிலுக்குச் சென்ற பிரதமர், கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த பயணத்தின் போது, சூரிய சக்தி, மாதிரிப் பூங்காக்கள், முன்மாதிரி அங்கன்வாடி மையம் மூலம் பாரவுங்க் கிராமத்தை எப்படி முன்மாதிரி கிராமமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது மோடிக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் கோவிந்தின் வாழ்க்கை பயணம் குறித்த கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Modi Ramnath Kovind
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment