இவ்வருட இறுதியில் தான் ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்... அதுவரை குடியரசு தலைவர் ஆட்சி தொடரும் - அமித் ஷா

ரம்ஜான், அமர்நாத் யாத்திரை, மற்றும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாகவே தேர்தல் தள்ளிப்போகிறது

President’s Rule Extension in Jammu Kashmir : ஒரு வாரமாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர் வாதங்களும், விவாதங்களும், அமளிகளும் நிலவி வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா பாஜகவின் ஆட்சி காலத்தில் உருவாகியுள்ள பாசிசத்திற்கான 7 அறிகுறிகள் என்ற பேச்சு நாடெங்கும் பெரும் ஆதரவையும் விவாத பொருளையும் உருவாக்கியுள்ளது.

President’s Rule Extension in Jammu Kashmir

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார் மெகபூபா முஃப்தி. தன்னுடைய தந்தை முஃபதி முகமது சயீத் மரணத்திற்கு பிறகு அவருடைய மகள் பதவி ஏற்றார். பாஜகவுடனான இந்த கூட்டணி இரண்டு வருடங்கள் கூட நீடிக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி பாஜக, பி.டி.பி. கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. நேஷ்னல் கான்ஃபிரஸ் கட்சியின் உமர் அப்துல்லாவும், பி.டி.பி கட்சியும் ஒன்றிணைந்து கூட்டணியாக ஆட்சி அமைக்க ஆளுநருக்கு கோரிக்கை அனுப்பியிருந்தனர். ஆனால் சத்யபால் மாலிக் நவம்பர் மாதம் 21ம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். இன்று அந்த மாநிலத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

மேலும் படிக்க : ஓடாத ஃபேக்ஸ் மிஷினை வைத்துக் கொண்டிருக்கும் ஆளுநர் அலுவலகம்… கிண்டல் செய்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள்

ரம்ஜான், அமர்நாத் யாத்திரை, மற்றும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாகவே தேர்தல் தள்ளிப்போகிறது என்று குறிப்பிட்ட அவர் இன்னும் 6 மாத காலத்திற்கு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி தான் நடைமுறையில் இருக்கும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதன் காராணமாக ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) அவசரச் சட்டம் 2019க்கு பதிலாக இரண்டு அவைகளிலும் புதிய ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு (திருத்த) மசோதாவை இன்று அறிமுகம் செய்தார் அமித் ஷா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close