Advertisment

ராமர் கோயில் பூமிபூஜை குழுவில் உள்ள தீட்சிதர், பணியிலிருக்கும் 16 காவலர்களுக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மனதில் கொண்டு 200 நபர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Priest and 16 cops involved in Ayodhya Ram temple pooja event test covid19 positive

Priest and 16 cops involved in Ayodhya Ram temple pooja event test covid19 positive  : ஆகஸ்ட் 5ம் தேதி அன்று நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை புரிய உள்ளார். அங்கு புதிதாக கோவில் கட்டப்பட இருக்கும் நிலையில் அதற்கான பூஜைகள் 5ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 11:30 மணிக்கு ஆரம்பித்து 12:30 மணி வரைக்கும் பூஜைகள் நடைபெறும்.  இந்நிலையில் அங்கு பூஜை நடத்த இருக்கும் தீட்சிதர் குழுவில் ஒரு நபருக்கும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 16 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

5ம் தேதி நடைபெற இருக்கும் பூமி பூஜையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இருக்கும் தடைகளை கணக்கில் கொண்டு, 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மடங்களிலும், கோவில்களிலும் அன்று சிறப்பு பூஜைகள் நடத்தவும் ராமர் கோவில் அறக்கட்டளை கேட்டுக் கொண்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நியூயார்க்கில் இருக்கும் டைம் சதுக்கத்தில் உள்ள திரைகளில், இந்த கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திட்டங்கள் ஏற்பாடாகி வருகிறது.

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment