Priest and 16 cops involved in Ayodhya Ram temple pooja event test covid19 positive : ஆகஸ்ட் 5ம் தேதி அன்று நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை புரிய உள்ளார். அங்கு புதிதாக கோவில் கட்டப்பட இருக்கும் நிலையில் அதற்கான பூஜைகள் 5ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 11:30 மணிக்கு ஆரம்பித்து 12:30 மணி வரைக்கும் பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் அங்கு பூஜை நடத்த இருக்கும் தீட்சிதர் குழுவில் ஒரு நபருக்கும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 16 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
5ம் தேதி நடைபெற இருக்கும் பூமி பூஜையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இருக்கும் தடைகளை கணக்கில் கொண்டு, 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மடங்களிலும், கோவில்களிலும் அன்று சிறப்பு பூஜைகள் நடத்தவும் ராமர் கோவில் அறக்கட்டளை கேட்டுக் கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
நியூயார்க்கில் இருக்கும் டைம் சதுக்கத்தில் உள்ள திரைகளில், இந்த கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திட்டங்கள் ஏற்பாடாகி வருகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Priest and 16 cops involved in ayodhya ram temple pooja event test covid19 positive
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு