/indian-express-tamil/media/media_files/mtJlm1KhycWRQhb1bj78.jpg)
காசிவிஸ்வநாதர்கோவில் கருவறைக்கு வெளியே இருக்கும் நுழைவாயிலில், நிறுத்தப்பட்டிருக்கும் காவலர்கள், சோதனை அடிப்படையில் வேஷ்டி, சட்டை அணிந்து மற்றும் நெற்றியில் திலம் வைத்து கொண்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு,ள்ளனர்.
இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களை சிறப்பாக வரவேற்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
வாரணாசி காவல்துறை ஆணையர் மோஹித் அகர்வால் கூறுகையில், இந்த நடைமுறை ஆனது 15 நாட்கள் சோதனை அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்றும், இதன் சாதகங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பிறகு அமலுக்கு வரும். இந்நிலையில் இந்த நடைமுறையை 2018ம் ஆண்டு, சோதனை அடிப்படையில் நடத்தப்பட்டது. ஆனால் அதைத்தொடர்ந்து அது நிறுத்தி வைக்கப்பட்டது என்று கூறினார்.
வழிபட கோவிலுக்கு வரும் பக்தர்கள், மதிப்பளிக்கப்படுவதாக கருத வேண்டும். குறிப்பாக கூட்டம் அதிகமாக இருக்கும் காலத்திலும், முக்கிய பிரமுகர்கள் வரும் காலத்தில் இந்த நடைமுறை உதவியாக இருக்கும்: என்றும் அவர் கூறினார்.
தற்போது வரை கோவில் கருவறைக்கு வெளியில் இருக்கும் 4 ஆண் காவலர்களுக்கு வேட்டி, சட்டையில் பக்தர்களை வரவேற்கும் பணி வழங்கப்பட்டுள்லது. மேலும் இங்கு இருக்கும் பெண் காவலர்களுக்கு இந்த சில நாட்களில் இந்த உடை அணிய உள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி கூறினார்.
அதுபோல கருவறை வாசலில் இருந்து, 15 மீட்டர் தொலைவில், பணியாற்றும் காவல்துறை அதிகாரிக்கும் காக்கி சட்டை மட்டும்தான் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் எதிர்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்ற்னார். இது குறித்து தனது எக்ஸ் தளத்துல், அகிலேஷ் யாதவ் பேசியதாவது “ எந்த காவல்துறை கையேட்டின் படி காவலர்கள் அர்ச்சகர் போல் உடை அணிவது சரியானது? அவ்வாறு உத்தரவு பிறப்பிப்பவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நாளை எந்த குண்டர்களும் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அப்பாவி பொதுமக்களை சூறையாடினால், உ.பி அரசும் நிர்வாகமும் என்ன பதில் சொல்லும்? கண்டிக்கத்தக்கது!” என்று கூறினார்.
எவ்வாறாயினும், "ஒட்டுமொத்த பார்வையாளர் அனுபவத்தை வளப்படுத்துவது மற்றும் காவல்துறை இருப்புடன் தொடர்புடைய எதிர்மறையான கருத்துக்களை அகற்றுவதே இதன் நோக்கம்" என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
நீண்ட வரிசையில் நிற்கும் போது, ​​அது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், இதைத் தணிக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் நட்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரி கூறினார்.
கோவிலில் பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்களுக்கு விரிவான மூன்று நாள் தகவல் தொடர்பு திறன் பயிற்சி நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.