பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்: பிட்காயின் குறித்து பதிவிட்ட ஹேக்கர்கள்

அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பிரதமரின் பதிவை தங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய தொடங்கினர்.

அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பிரதமரின் பதிவை தங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய தொடங்கினர்.

author-image
WebDesk
New Update
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்: பிட்காயின் குறித்து பதிவிட்ட ஹேக்கர்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள் , பிட்காயின் குறித்த பதிவு ஒன்றையும் வெளியிட்டனர். உடனடியாக அவரது கணக்கு மீட்கப்பட்டு, பதிவும் நீக்கப்பட்டது. மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது. இதில் பல மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது.

அவரது பக்கத்தில், இந்தியாவில் பிட்காயினை அதிகாரபூர்வ நாணயமாக அறிவித்துவிட்டதாக பதிவிடப்பட்டது. ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டறிந்த பிரதமர் அலுவலக அதிகாரிகள், உடனடியாக ட்விட்டர் கணக்கை மீட்டெடுத்து அந்த பதிவுகளை டெலிட் செய்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள் குறிப்பிட்டு இருந்தனர் ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

அதற்குள் அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பிரதமரின் பதிவை தங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய தொடங்கினர்.

செப்டம்பர் 2020 இல், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியுடன் இணைக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு அடையாளம் தெரியாத நபரால் ஹேக் செய்யப்பட்டது.

சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பராக் ஒபாமா, கன்யே வெஸ்ட், பில் கேட்ஸ் முதல் எலோன் மஸ்க் வரை பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, “பிட்காயினை அனுப்புங்கள், பிரபலமானவர்கள் உங்கள் பணத்தை இரட்டிப்பாக திருப்பி அனுப்புவார்கள்” என்ற செய்தியை வெளியிடப்பட்டது. அப்போது பல கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதால், அதனை மீட்டெடுக்க இரண்டு மணி நேரம் ட்விட்டர் கணக்குகள் நிறுத்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter Pm Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: