Prime Minister Modi's letters to his mother Heeraben will published as a book Letters to mother
Prime Minister Modi's letters to his mother Heeraben will published as a book Letters to mother : குஜராத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களில் அதிக நாட்டம் கொண்ட அவர் பிறகு அந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
Advertisment
பிறகு பாஜகவில் இணைந்தார். அவரின் களப்பணி, பாஜக அவருக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கியது. பின்னர் குஜராத்தின் முதல்வராக அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் வீட்டில் இருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் களப்பணிகளை மேற்கொண்ட அவர், தன்னுள் ஒரு பழக்கத்தை வைத்திருந்தார். எங்கே சென்றாலும் தன்னுடைய தாய்க்கு கடிதம் எழுதுவதை அவர் கைவிட்டதே இல்லை.
அவர் எழுதிய கடிதங்கள் சிலவற்றை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார் நரேந்திர மோடியின் அம்மா ஹீரா பென். அந்த கடிதங்களை தற்போது புத்தகமாக தொகுத்து வெளியிட உள்ளனர். பிரபல பத்திரிக்கையாளர் பாவனா சோமையா அந்த கடிதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, லெட்டர்ஸ் டூ மதர் என்று புத்தகத்திற்கு பெயரும் வைத்துள்ளார். இந்த புத்தகம் இம்மாதத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“