Prime Minister Narendra Modi inaugurates Atal Tunnal at Himachal Pradesh : உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை இன்று காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். மணாலியின் லஹாலில் இருந்து ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வரையான 9 கிலோமீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை சுரங்கப் பாதை அமைக்க, முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் 2000-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தார்.
வருடத்தின் பாதி நாள், கிட்டத்தட்ட 6 மாத காலங்களுக்கு ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் எல்லைப் பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த எல்லைப் பகுதிகளில் இருந்து லடாக் வரையில் இருக்கும் பாதை மூடபட்டிருக்கும். இதனை சரி செய்து, மக்கள் பயணம் தொடர்ந்து நடைபெறுவதற்காக இந்த திட்டத்தை அறிவித்தார் வாஜ்பாய்.
இந்தப் பணிகளுக்கு 2002ம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மோசமான வானிலை மற்றும் கடும் சவால்களுக்கு மத்தியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
3500 கோடி ரூபாய் செலவில் இந்த சுரங்கப் பாதை கட்டப்பட்டுள்ளது. மணாலி - லே இடையேயான தூரம் 46 கிலோமீட்டர் குறைந்து, 4 முதல் 5 மணிநேரம் வரை பயண நேரமும் குறைக்கப்படுவதற்கு இந்த சுரங்கப்பாதை உதவுகிறது.
8 மீட்டர் அகலத்தில் 2 வழிப் பாதையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த சாலையின் உயரம் 5. 525 மீட்டர் ஆகும். நாள் ஒன்றுக்கு 3000 கார்கள், 1500 சரக்கு வாகனங்கள் பயணிக்க முடியும். இந்த சாலையில் அதிகபட்ச வேகம் 80 கிலோமீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையில் ஒவ்வொரு 150 மீட்டருக்கும் ஒரு தொலைபேசி வசதி வைக்கப்பட்டுள்ளாது. ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவிலும் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு 500 மீட்டரிலும் அவசர கால தேவைக்காக வெளியேறும் வசதியும் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிலோமீட்டரிலும் காற்றின் தரம் மதிப்பிடப்படும். ஒவ்வொரு 250 மீட்டரிலும் சிசிடிவி கேமராக்களுடன் தானியங்கி விபத்து கண்காணிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு உலக தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த சாலை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil