‘வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்’ – மோடி புகழாரம்

ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாளான இன்று அவரை நினைவுகூறும் வகையில் பிரதமர் மோடி தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் முதல் சுதந்திர விடுதலை போராட்ட வீராங்கனையாக விளங்குபவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார்.ராணி லக்‌ஷ்மி பாய் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், ஆனால் அவருக்கு முன்னதாக 17ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயேயரை வீர தீரத்துடன் எதிர்த்தவர் ராணி வேலுநாச்சியார்.

வீரம் மிக்க பெண்மணியான வேலுநாச்சியாரின் 282ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

அதில், “வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார், டிசம்பர் 25 1796 அன்று மறைந்தார். ராணியின் நினைவாக கடந்த 2008ம் ஆண்டு இந்திய அரசால் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Prime minister narendra modi pays tributes to rani velu nachiyar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express