லேட்டா ரிலீஸ் ஆனாலும் லேட்டஸ்டா ரிலீஸ் ஆன மோடியின் ஃபிட்னஸ் வீடியோ!!!

இந்தியா முழுவதும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுகளும், ஃபிட்னஸ் சேலஞ்சுகளும் பிரபலமாகி வருகிறது. முன்னதாக பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் ஃபிட்னஸ் செலஞ்ச் என்ற புதிய சவாலைக் கையில் எடுத்துள்ளனர். இது தொடர்பாக, விராட் கோலி கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உடற்பயிற்சி வீடியோ ஒன்றின் மூலமாக ஃபிட்னஸ் சவால் விடுத்தார். இதற்கு மோடியும் விரைவில் தனது வீடியோவை வெளியிடுவேன் என்று பதிலளித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை தனது உடற்பயிற்சி வீடியோவை ரிலீஸ் செய்துள்ளார். இதில் பரந்த புல்வேளியில் உடற்பயிற்சி செய்கிறார் மோடி. 1 நிமிடம் 48 வினாடிகள் நீடிக்கும் இந்தப் பயிற்சி வீடியோவில் புல் மீதும் கற்கள் மீது நடந்து தனது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக்கொள்வதாகத் தெரிவிக்கிறார்.

வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனை பார்த்துள்ளனர். மேலும் இதை தொடர்ந்து,  கர்நாட முதல்வர் குமாரசாமிக்கு மற்றும் காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிகர் பத்ராவிற்கும் சவால் விடுத்துள்ளார்.

×Close
×Close