இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தைக்கு தேவையான சூழல் நிலவவில்லை. மேலும் சார்க் உறுப்பு நாடுகளை அழைப்பதற்கு பதிலாக பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் அழைக்கப்பட்டன. திட்டமிட்டே பாகிஸ்தானை புறக்கணித்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த மாநாடு முடிந்தவுடன் இந்தியா - கிர்கிஸ்தான் இடையிலான முதல் வர்த்தக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக மோடி அறிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் - மாணவர்கள் வேண்டுகோள்
சோவியத் காலத்து கட்டிடத்தின் முன்பு 5 மருத்துவபட்டதாரி மாணவர்கள் பிரதமரின் வருகை குறித்து இப்படி தான் தெரிவிக்கின்றார்கள். அவர்களின் அரசியல் சூழ்நிலைகளை ஓரம் தள்ளிவிட்டு பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்று பேச வேண்டும் என்று கூறுகிறார் 24 வயது மிக்க ரித்தேஷ் குமார் ஷர்மா.
பாகிஸ்தான் விமான நிலையங்களை பயன்படுத்த கூடாது என்று கூறப்பட்டதால் நீண்ட நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். மேலும் இதனால் அதிக பணம் செலவாகும் என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார் ஷர்மா.
பாகிஸ்தான் மண்ணில் கால்வைக்கக் கூடாது என்பதில் மிகவும் தீர்க்கமாக இருந்த இந்தியா பாகிஸ்தான் வழியாக கிர்கிஸ்தான் செல்லாமல், ஓமன், ஈரான், மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிஷ்கெக்கிற்கு பயணம் சென்றுள்ளார் மோடி. பாதுகாப்பு போன்ற புற காரணங்கள் காரணமாக நாங்கள் இந்த பயணபாதையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சரகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து கிர்கிஸ்தான் செல்லவிருக்கும் விமானத்திற்கான க்ளியரன்ஸை இரண்டு முறை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா முறையிட்டது. அதற்கு பாகிஸ்தான் அரசும் சரி என்று கூறியுள்ளது. ஆனால் எந்த வழியை தேர்ந்தெடுத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும் இந்தியாவின் தனிப்பட்ட விருப்பம் என பாகிஸ்தானின் வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இன்று கிர்கிஸ்தான் செல்கின்றார். மோடி மத்திய பிஷ்கெக்கில் உள்ள நட்சத்திரவிடுதியில் தங்குகின்றார். இம்ரான் கான் அல் அர்ச்சாவில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகின்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருதரப்பு, பலதரப்பு, அரசியல், பாதுகாப்பு குறித்து பேசப்படும் அனைத்து விவாதங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்று மோடி இந்தியாவில் இருந்து கிர்கிஸ்தான் செல்லும் போது குறிப்பிட்டுள்ளார்.