No-confidence motion in Parliament: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தபட்டு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதையடுத்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இன்று மிகவும் முக்கியமான நாள் இன்று. மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மக்களவையில் இன்று நடைபெற இருக்கும் இந்த விவாதத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி முதலில் பேச இருக்கிறார். பிறகு மற்ற கட்சிகள் பேச உள்ளனர். மோடி அரசுக்கு எதிராக இருக்கும் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க உள்ளனர்.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு குறித்த விரிவான செய்திக்கு இதை கிளிக் செய்யுங்கள்
இதையடுத்து, இன்று நடைபெறும் விவாதம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் எம்.பி.களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “நமது ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள். மக்களவையில் இன்றைய விவாதத்தில் ஆக்கபூர்வமான, விரிவான மற்றும் அமளியில்லாத விவாதங்களை எம்.பி.,க்கள் எழுப்புவார்கள் என நம்புகிறேன். மக்களுக்கும், அரசியலுக்கும் இதை அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்தியாவே நம்மை உன்னிப்பாக கவனிக்கிறது” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு சில கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தாலும், இன்று நடைபெற இருக்கும் விவாதத்தில் பாஜக-விற்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த வாக்கெடுப்பில் பாஜக வெற்றியடையும் வாய்ப்புகளே அதிகம்.