Prime Minister Narendra Modi won't participate Holi Milan programme : கடந்த இரண்டு,மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் ஒரு நபராகவே மோடி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகின்றேன் என்று மோடி ட்வீட் செய்திருந்தார். நேற்று ”வருகின்ற பெண்கள் தினத்தை ஒட்டி, என்னுடைய சமூக வலைதள பக்கங்களை அனைத்தும், வாழ்வில் வெற்றி கண்ட பெண்களிடம் தருகின்றேன். அவர்களுடைய எண்ணங்களை உலகுக்கு தெரிவிக்கட்டும்” என்று அறிவித்திருந்தார்.
அதற்கான #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் உங்களுக்கு தெரிந்த வெற்றி பெற்ற பெண்களின் கதைகளை நீங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யலாம். இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா?
இன்று மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில் ஹோலி கொண்டாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் அங்கே தெரிவித்திருக்கிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால், சுகாதாரத்துறை, உலக ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், அதிகமாக மக்கள் நடமாடும் பகுதிகளை தவிர்த்தல் நல்லது என்று கூறியிருக்கிறார்கள். அதனை பின்பற்றுவதற்காக, இந்த ஆண்டு நடைபெறும் எந்தவிதமான ஹோலி கொண்டாட்டங்களிலும் மோடி பங்கேற்கமாட்டேன் என்று அறிவித்துள்ளார். நோய் தொற்றில் இருந்து அனைவரும் பிழைத்து, மகிழ்ச்சியாக இருந்தாலே கொண்டாட்டம் தான். உங்களுக்கும் தான், வசந்தத்தினை வரவேற்கும் இந்த திருவிழாவை சுத்தமான முறையிலும், சுகாதாரமான முறையிலும் இன்பமாக கொண்டாடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"