மகாத்மா காந்தி, பகத்சிங்கையும் மற்ற புரட்சியாளர்களையும் மீட்பதற்கு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று இந்திய அரசாங்கத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் புதன்கிழமை கூறினார். மேலும், இந்திய சுதந்திரத்தின் இந்த மாற்று வரலாற்றை ஒடுக்குவதற்கு புரட்சியாளர்களின் கதை வேண்டுமென்ற முறியடிக்கப்பட்டது.” என்று கூறினார்.
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
குஜராத் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘புரட்சியாளர்கள்: இந்தியாவின் வரலாற்றை மீண்டும் செல்லுதல்’என்ற தலைப்பில் உரையாற்றிய, சன்யால், இந்தக் கதை இந்தியாவின் அரசியல் ஸ்தாபனத்திற்கும் சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கும் அசௌகரியமாக இருக்கிறது என்றார். இந்த புரட்சியாளர்களின் கதையை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“பகத்சிங்கையோ அல்லது வேறு ஏதேனும் புரட்சியாளரையோ தூக்கு மேடையில் இருந்து காப்பாற்ற மகாத்மா காந்தி வெற்றி பெற்றிருப்பாரா என்று சொல்வது கடினம். ஏனென்றால், தரவுகள் இல்லை. அவர் அதிக முயற்சி செய்யவில்லை.” என்று முதன்மை பொருளாதார ஆலோசகர், பார்வையாளர்களாக இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கூறினார்.
இந்த விஷயத்தை விரிவாகக் கூறிய அவர், “காந்தி வன்முறையை மன்னிக்கும் அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு இந்திய வீரர்களை நியமித்தார். முதலாம் உலகப் போருக்கு பிரிட்டிஷ் ராணுவத்திற்காக இந்திய வீரர்களை ஈடுபடுத்த அவர் தயாராக இருந்தார் எனில், பகத்சிங் விவகாரத்தில் அதைச் செய்வதில் அவருக்கு ஏன் ஆட்சேபனை இருந்தது? கிலாபத் இயக்கத்தைத் தொடர்ந்து மலபார் கிளர்ச்சியின் வன்முறையை குறைத்து மதிப்பிட காந்திஜி முயன்றார். இது ஒரு வகையில் காந்திஜியே வழிநடத்திய மற்றொரு இயக்கம். அந்த பின்னணியில், புரட்சியாளர்கள் காந்திஜிக்கு எதிராக இருந்தனர். அதனால், அவர் பகத்சிங் மற்றும் பிற புரட்சியாளர்களை மீட்பதற்கு போதிய முயற்சி எடுக்கவில்லை”
என்று கூறினார்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த சன்யால், “புரட்சியாளர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருந்தால், அரசியல் அமைப்பின் எதிர்காலம் இயல்பாகவே பாசிசமாக இருந்திருக்கும்” என்று கூறினார். மேலும் “இந்திய புரட்சியாளர்கள் பாசிசத்தில் முடிவடைந்திருப்பார்கள் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை. அவர்களில் பலர் ராஷ் பிஹாரி போஸ், ஸ்ரீ அரவிந்தோ போன்றவர்களை நன்றாகப் படித்தனர். இது ஒரு பிரச்சாரம்… உண்மையில், இந்தியாவின் சுதந்திரத்தின் இந்த மாற்று வரலாற்றை நசுக்குவது மற்றும் அடக்குவது இந்த புரட்சியாளர்களின் கதையை வேண்டுமென்றே முறியடிப்பது மிகவும் நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
ஆயுதக் கிளர்ச்சி மூலம் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது, ஆனால் இயற்கையில் பாசிசமாக மாறாத ஒரு ஜனநாயக குடியரசாக இருந்த ஐரிஷ் குடியரசை உதாரணமாக அவர் மேற்கோள் காட்டினார். “எனவே சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா அந்த பாதையில் சென்றிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக புரட்சியாளர்களில் மூத்த தலைவர்கள் பெரும்பாலோர் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போரின்போது ராஷ் பிஹாரி போஸ் இறந்தார். இரண்டாம் உலகப் போரின்போது சச்சீந்திர நாத் சன்யால் இறந்தார். பிஸ்மில், பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் கொல்லப்பட்டனர். புரட்சிகர இயக்கத்தின் இரண்டு மூத்த தலைவர்கள் மட்டுமே சுதந்திரம் வரை தப்பிப்பிழைத்தனர். அவர்கள் இருவரும் இயக்கத்தின் அசல் நிறுவனர்கள் - ஸ்ரீ அரவிந்தோ மற்றும் சாவர்க்கர்.” என்று அவர் கூறினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, புரட்சிகர இயக்கத்தின் கருத்தியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் சிதறியது. இந்த புரட்சியாளர்களில் சிலர் காங்கிரசில் சேர்ந்தனர். சிலர் இந்து மகாசபா இருந்தனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தனர் என்று கூறினார். “அவர்கள் அமைப்பு மூலம் முற்றிலும் கலைந்து சென்றனர்... எனவே இந்த பெயர்கள் அனைத்தையும் நாம் அறிவோம், ஆனால், அவை ஒருபோதும் ஒரு ஐக்கிய இயக்கம் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த கதை இந்தியாவின் அரசியல் ஸ்தாபனத்திற்கும் பிரிட்டிஷுக்கும் அசௌகரியமாக இருந்தது...” என்று கூறினார்.
பாடத்திட்டத்திலும் புத்தகங்களிலும் இந்த கதை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் சன்யால் வலியுறுத்தினார். மேலும், “இந்த விவரனை நம்முடைய பாடத்திட்டத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவது முக்கியம்... மக்கள்திரள் பண்பாடு முன்னேறி வருகிறது. எனவே சமீபத்தில் ஐஎன்ஏவின் கதையை அமேசான் பிரைம் தொடரான மறக்கப்பட்ட இராணுவத்தை கொண்டுவந்தது. நேதாஜியின் கதையும் உங்களிடம் உள்ளது. கடந்த ஆண்டு, முதன்முறையாக, ஐ.என்.ஏ வீரர்களுக்கு குடியரசு தின அணிவகுப்புக்கு வீரர்களை அழைப்பதன் மூலம் அவர்களுக்கு தகுதியான மரியாதை வழங்கப்பட்டது. இது நடக்க சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆனது… ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் புரட்சிகர கண்ணோட்டத்தில் சுதந்திரப் போராட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘பிப்லோபி பாரத்’ என்ற புதிய அருங்காட்சியகத்தை அறிவித்தார்…” என்று சன்யால் கூறினார்.
இது “இந்தியா எவ்வாறு சுதந்திரமடைந்தது என்பது பற்றிய மிகவும் மாறுபட்ட கதை. எதிர்ப்பு, விடாமுயற்சி மற்றும் இறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சிக்கப்பட்ட ஒரு யுக்தியின் கதை. ஆங்கிலேயர்கள் இறுதியாக இந்தியாவை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தனர்.” என்று சன்யால் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.