ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை டிச.31-ம் தேதி வரை விற்க மத்திய அரசு அனுமதி

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை டிச.31-ம் தேதி வரை விற்க மத்திய அரசு கால அவகாசம் வழங்கி உள்ளது.

supper market

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை டிச.31-ம் தேதி வரை விற்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நாடுமுழுவதும் விற்பனை வரி, நுழைவு வரி, சுங்க வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. ஓரே நாடு ஓரே வரி என்ற கோஷத்துடன் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஜூலை 1ம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இப்போது அனைத்து பொருட்களும் ஜிஎஸ்டி முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் மட்டும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு  டிச.31-ம் தேதி வரை கால அவகாசம்  நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பில் உள்ள பழைய பொருட்களை டிசம்பர் 31-ம் தேதி வரை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த நிலையில் மேலும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Prior to the gst tax liability the central government has been allowed to sell the products till december

Next Story
விபத்தில் சிக்கிய வித்யா பாலன்: மயிரிழையில் உயிர் தப்பினார்,actress vidya balan, nerkonda paarvai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com