நாட்டையே உலுக்கிய 8 வயது சிறுமியின் கொலையை நியாப்படுத்திய வங்கி ஊழியர்!

அவள் கொல்லப்பட்டதே நல்லது. இல்லையெனில், நாளை, அவள்

8 வயது சிறுமியை 8 பேர்க் கொண்ட கும்பல்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது சரியே என்று நியாப்படுத்திய வங்கி ஊழியர் அதிரடியாக பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி கோயில் கருவறையில் வைத்து  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த குற்றச் செயலில்  ஈடுப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும் என்று பல குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களு, இந்த சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்றைய தினம்  இந்த சம்பவம் குறித்து மவுனம் கலைத்த பிரதமர், மோடி குற்றச்செயலில் ஈடுப்பட்டவர்கள் பாரம்பட்சம் இன்றி தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரளாவில் தனியார் வங்கி ஒன்றில் பணிப்புரியும் வங்கி ஊழியர் ஒருவர்,  8 வயது சிறுமிக்கு  நடந்த கொடூரத்தை நியாப்படுத்தி  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ”அவள் கொல்லப்பட்டதே நல்லது. இல்லையெனில், நாளை, அவள் இந்தியாவிற்கு எதிராக மனிதக் குண்டாக உருவெடுப்பாள்” என்று தெரிவித்திருந்தார்.

நேற்று மாலை  வெளியான இந்த பதிவிற்கு  அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் சிலர், ”அந்த சிறுமி இஸ்லாமிய பெண்ணாக இருந்ததால் தான் இப்படி குறிப்பிட்டுள்ளீர்கள். அவள் இந்து மதத்தைச் சேர்ந்தவளாக இருந்தால் உங்களின்  கருத்து என்ன” என்று பல கேள்விகளை எழுப்பி இருந்தனர். வங்கி ஊழியரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

அத்துடன்,  சிலர் அந்த தனியார் வங்கிக்கே கால் செய்து, அந்த நபரை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதன் விளைவாக இறுதியில் அந்த நிறுவனம்,  வங்கி ஊழியர் விஷ்ணு நந்தக்குமாரை வேலையில் இருந்து நீக்கியது.

அத்துடன்,  அவர் தெரிவித்த கருத்திற்கும் வங்கிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றூம், அவரின் கருத்தை  வங்கி நிர்வாகம்  ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்று தெரிவித்துள்ளது.

 

Posted by Kotak Mahindra Bank Ltd. on 13 एप्रिल 2018

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close